புதன்கிழமை, ஜனவரி 15, 2025

முடி கரு கருன்னு நல்லா வளரணுமா? அமேசான் காட்டு மூலிகை எல்லாம் வேணா.. இந்த 7 ஜூஸ் குடிங்க போதும்

Home remedies for long hair: பெண்களுக்கு தினசரி காலையில் எழுந்தா என்ன சமைக்கிறது ஒரு கவலை. . அதைவிட பெரிய கவலை என்ன இருக்குன்னா தலையில் சீப்பு வைக்கும் போது முடி கொத்து கொத்தா கொட்டுறது. கல்யாணத்திற்கு முன்பு கூட ஏதாவது ஒரு அழகு குறிப்பை பயன்படுத்தி முடியை ஓரளவுக்கு காப்பாற்றி வைத்துவிடலாம்.

ஆனால் திருமணத்திற்கு பிறகு அதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்குதுன்னு விட்டுடுறோம். கடைசில ஒரு நாள் பார்க்கும்போது சும்மா கையை தலையில் வச்சாலே முடி கொத்தா கையோட வந்துருது. இனிமே எங்க ஹேர் மாஸ்க் போட டைம் கிடைக்க போது என்ன நினைக்கிறோம்.

சில நேரத்துல நமக்கு மிஞ்சி என்ன இருக்கப் போகுது அப்படின்னு நினைச்சுட்டு மார்க்கெட்டில் கிடைக்கிற அரிய வகை என்ன என்ற பெயரில் அதிக செலவு பண்ணி எண்ணெய் வாங்கி தேக்கிறோம். யாருக்குமே முடி எப்படி ஆரோக்கியமாக இருக்கும், எப்படி வளரும் என்பது தெரியவில்லை.

தலைக்கு தேய்க்கிற எண்ணெய், ஹேர் மாஸ்க் மட்டும் முடியை வளர வைக்காது. நம் வயிற்றுக்குள் உட்கொள்ளும் உணவு வகைகள் தான் தலை முடியை செழித்து வளர வைக்கும். தலைமுடி உதிர்வதை பற்றி கவலைப்படுகிறவர்கள் இந்த செய்தியில் சொல்லப்படும் நான்கு வகையான ஜூஸை ஒரு நாளைக்கு ஒன்னு முயற்சி செய்து பாருங்கள். குறிப்பிட்ட காலத்தில் நல்ல மாறுபாடு உங்கள் முடி அடர்த்தியில் தெரியும்.

இயற்கையாக குடிக்க வேண்டிய 7 ஜூஸ்கள்

கீரை சாறு: பொதுவாக கீரை வகைகள் மொத்த உடலுக்குமே நல்லது. அதிலும் தலை முடி வளர்வதற்கு அதிக பங்காற்றுகிறது. கீரையில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி, சிலிக்கா மற்றும் இரும்பு சத்து இருக்கிறது. இது உச்சந்தலைக்கு ஊட்டமளித்து மயிர் கால்களை பலப்படுத்துகிறது. இதனால் முடி உதிர்வதை தடுக்கலாம்.

தேங்காய் தண்ணீர்: தேங்காய் தண்ணீர் குடிக்க யாருக்குத்தான் பிடிக்காது. ஊட்டச்சத்து இருக்கிறது என்று சொன்னால் கேட்கவா வேண்டும். தேங்காய் தண்ணீரில் இருப்பதால், மறைமுகமாக முடி வளர்வதற்கு அதிக பங்காற்றுகிறது.

கற்றாழை சாறு: கற்றாழை எப்போதுமே முடி வளர்ச்சிக்கு அதிக பங்காற்றுகிறது. இதனால் தான் கற்றாழை ஷாம்பு என்று கெமிக்கல் அளவுக்கு இதன் பயன்பாடு வந்துவிட்டது. இது உச்சந்தலைக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது. இதனால் அதிக உடல் சூட்டினால் முடி உதிர்வது, வீக் ஆவது போன்றவை தடுக்கப்படுகிறது.

நெல்லிக்காய் சாறு: நெல்லிக்காயில் வைட்டமின் சி இருப்பது எல்லோருக்குமே தெரியும். நெல்லிக்காய் ஷாம்பு, நெல்லிக்காய் கலந்த சீயக்காய், நெல்லிக்காய் எண்ணெய் என ஏதேதோ மார்க்கெட்டில் வந்து விட்டது. இதையெல்லாம் வாங்கி உபயோகப்படுத்துவதற்கு பதிலாக மார்க்கெட்டில் ஒரு 20 ரூபாய்க்கு நெல்லிக்காய் வாங்கி வைத்துக்கொண்டு 2 நாளுக்கு ஒரு தடவை ஜூஸ் போட்டு கொடுத்தாலே போதும்.

வெள்ளரிக்காய் சாறு: வெள்ளரிக்காய் நீர்ச்சத்து நிறைந்த உணவு பொருள். கோடை காலங்களில் இதை சாப்பிட்டாலே உடம்புக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கும் என்பது தெரியும். இதை ஜூஸ் போட்டு குடிக்கும் போதும் அப்படியே எல்லா சத்தும் உடம்புக்கு கிடைக்கிறது. முடி கொட்டாமல் இருக்க தலையில் ஈரப்பதம் அவசியம். அந்த ஈர பதத்தை இந்த வெள்ளரிக்காய் ஜூஸ் கொடுத்து விடும்.

கிவி சாறு: கிவி பழத்தில் வைட்டமின் சி இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யோசிக்காமல் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இந்த பழம் சாப்பிட்டால் உடம்பில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். இது முடிக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துகளையும் கொடுத்து விடும்.

பீட்ரூட்: பீட்ரூட் பெண்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். கருப்பை பிரச்சனையில் இருந்து ஹீமோகுளோபின் பிரச்சனை வரைக்கும் எல்லாத்தையும் சரி பண்ணக்கூடியது. பீட்ரூட் ஜூஸ் குடிக்கும் பொழுது உடம்பில் ரத்த ஓட்டம் சீராக இருக்கிறது. மயிர் கால்களில் ரத்த ஓட்டம் சீராக இருந்தாலே தலைமுடி வளர்வதில் எந்த பாதிப்பும் இருக்காது.

Trending News