திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

2022ல் காணாமல் போன 5 ஹீரோக்கள்.. 6 படம் கையில் இருந்தும் பரிதவிக்கும் விஜய் ஆண்டனி

கோலிவுட்டில் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த நடிகர்கள் சிலர் இந்த வருடம் காணாமல் போயிருக்கிறார்கள். இந்த வருடத்தில் ஒரு படம் கூட இவர்களுக்கு ரிலீஸ் ஆகவில்லை. கைவசம் அதிக படங்கள் இருப்பவர்களுக்கு கூட இந்த வருடம் படங்களின் அப்டேட் கூட வரவில்லை. திறமையிருந்தும் இந்த வருடத்தில் இவர்கள் ஜொலிக்க முடியாமல் போயிருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனி: பல சூப்பர் ஹிட் பாடல்களை இசையமைத்து கொடுத்தவர் விஜய் ஆண்டனி. இவர் 2012 ஆம் ஆண்டு நான் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் சலீம், பிச்சைக்காரன் போன்ற வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்தார். இவரது கைவசம் இப்போது ஆறு படங்கள் இருந்தாலும் இந்த வருடம் எந்த அப்டேட்டும் இல்லை.

Also Read: தலக்கணத்தில் ஆடும் விஜய் ஆண்டனி.. தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்

ராகவா லாரன்ஸ்: 20 களின் ஆரம்பத்தில் அஜித், விஜய் போன்ற டாப் ஹீரோக்களின் பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் ராகவா லாரன்ஸ். 2007 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன சந்திரமுகி திரைப்படத்தின் மூலம் இவர் ஹீரோ ஆனார். இவர் நடித்த காஞ்சனா மிகப்பெரிய வெற்றியடைய அதையே சீரிஸாக எடுக்க ஆரம்பித்தார். இவருக்கு இந்த வருடம் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.

ஹரிஷ் கல்யாண்: சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். வெற்றிமாறன் இயக்கத்தில் பொறியாளன் திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்னர் பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்ற வெற்றி படங்களை கொடுத்த இவருக்கு இந்த வருடம் சரியாக அமையவில்லை. 2022ல் இவரின் படம் எதுமே ரிலீஸ் ஆகவில்லை.

Also Read: தளபதி வேண்டாம், பிக் பாஸ் நடிகர் போதும்.. திருமணத்திற்க்கு பின் ஹரிஷ் கல்யாணுக்கு அடித்த ஜாக்பாட்

தினேஷ்: ஈ, ஆடுகளம் போன்ற படங்களில் துணை நடிகராக நடித்தவர் தினேஷ். இவர் பா.ரஞ்சித்தின் அட்டகத்தி படத்தின் மூலம் ஹீரோ ஆனார். தன்னுடைய வித்தியாசமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர். விசாரணை, கபாலி போன்ற வெற்றி படங்களில் நடித்தார். ஆனால் இவருக்கு இந்த வருடம் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.

கிருஷ்ணா: இயக்குனர் விஷ்ணுவர்தனின் சகோதரன் தான் நடிகர் கிருஷ்ணா ஆவார். இவர் நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். 2012 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன கழுகு திரைப்படத்தின் மூலம் ஹீரோ ஆனார். யாமிருக்க பயமேன், வானவராயன் வல்லவராயன் படங்களில் நடித்த இவருக்கு கடந்த சில வருடங்களாக படங்கள் எதுவுமில்லை.

Also Read: சத்தமில்லாமல் காய் நகர்த்திய ஹரிஷ் கல்யாண்.. கடுப்பில் முன்னாள் காதலிகள்

Trending News