வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஹீரோக்களை நடிப்பில் மிரள செய்த மறைந்த 5 வில்லன்கள்.. விஜய்க்கு தண்ணி காட்டிய வேதநாயகம்

5 Villains: படத்தில் ஹீரோக்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே போல் வில்லன் கதாபாத்திரமும் பெரிதாய் பார்க்கப்படுகிறது. மேலும் நெகட்டிவ் ரோல் ஏற்று நடித்து அதிலும் பட்டைய கிளப்பிய நடிகர்கள் ஏராளம். அவ்வாறு ஹீரோக்களை நடிப்பில் மிரள செய்த மறைந்த 5 வில்லன்களை பற்றிய தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

பிரதீப் சக்தி: நெகட்டிவ் கதாபாத்திரம் ஏற்று தெலுங்கு படங்களில் நடித்தவர் பிரதீப் சக்தி. படத்தில் இவரின் நடிப்பு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாய் முரட்டுத்தனமான உடல் அமைப்பு கொண்டவர். தமிழில் பல படங்கள் ஏற்று நடித்திருந்தாலும், குறிப்பாக குணா, நாயகன், தளபதி போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிதாய் பேசப்பட்டது.

Also Read: நான் யானை இல்ல குதிரை! சூப்பர் ஸ்டார் சொன்ன வார்த்தை.. நெல்சனை வைத்து தலைவர் ஆடும் ஆடு புலி ஆட்டம்

டைகர் பிரபாகர்: உடலமைப்பிலும், வில்லத்தனத்திலும் மிரட்டல் விடும் வகையில் தன் நடிப்பினை மேற்கொண்டவர். பெரும்பாலும் பெண்களை கடத்தும் மூர்க்கமான கேரக்டர்களில் நடித்திருப்பார். அவை ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாய் அமைந்திருக்கும். அதிலும் குறிப்பாக பாண்டியன் படத்தில் இவரது நடிப்பு பெரிதாய் பார்க்கப்பட்டது.

ராஜன் பி தேவ்: தன் முகம் பாவனையால் பார்ப்பவர் எளிதில் கண்டுபிடிக்கும் அளவில் வில்லத்தனத்தில் அசத்திருப்பார். சுமார் 500க்கும் மேற்பட்ட பல மொழி படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரம் ஏற்று நடித்த இவரை திரை உலகம் தவற விட்டது. மேலும் குறிப்பாக ஜென்டில்மேன் படத்தில் இவரது நடிப்பு கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.

Also Read: சின்னத்திரையில் கொடி கட்டி பறக்கும் 5 பிரபலங்கள்.. என்டர்டைன்மென்டில் பிச்சு உதறும் புகழ்

சலீம் கோஸ்: இவர் ஏற்ற படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் சிறப்புற நடித்திருப்பார். தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த சின்ன கவுண்டர், ரெட், வேட்டைக்காரன் போன்ற படங்களில் நன்றாக ஸ்கோர் செய்து இருப்பார். அதிலும் குறிப்பாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த வேட்டைக்காரன் படத்தில் வேதநாயகம் கேரக்டரில் மேற்கொண்ட நடிப்பு, படத்திற்கு கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.

சகன் கான்: ஹீரோக்களுக்கு நிகராய் ஸ்மார்ட் ஆன முக அமைப்பு கொண்ட இவர் வில்லத்தனத்தில் அசத்திய படங்கள் ஏராளம். அவ்வாறு மூர்க்கமான கதாபாத்திரம் ஏற்று நடித்த படங்களில் சேதுபதி ஐபிஎஸ், முறைமாமன் போன்ற படங்கள் மக்கள் நினைவு கொள்ளும் விதமாய் அமைந்து வருகிறது. சமீபத்தில் நெஞ்சுவலியால் இவர் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மதுவால் வாழ்க்கை இழந்த நடிகை.. நடை பிணமாக மாறிட்டேன் என புலம்பிய கமல், ரஜினி பட ஹீரோயின்

Trending News