சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

60-70 களில் ஹீரோயின்கள் விரும்பிய 5 காதல் மன்னர்கள்.. ஜெமினிக்கு டஃப் கொடுத்த ஜெயலலிதாவிற்கு பிடித்த ஹீரோ

70 களில் தமிழ் சினிமாவில் தாங்கள் நடித்த படங்களின் மூலம் காதல் மன்னனாக ஒரு சில நடிகர்கள் திகழ்ந்து வந்தனர். அதிலும் இவர்கள் நடித்த படங்களில் காதல் காட்சிகளின் மூலம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஹீரோயின்களே கூட விரும்பும் அளவிற்கு காதல் மன்னன் ஆகவே வலம் வந்தனர். அதிலும் காதல் மன்னன் ஜெமினிகணேசனுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் நடிகை ஜெயலலிதாவிற்கு பிடித்த ஹீரோவாக ஒருவர் இருந்திருக்கிறார். அப்படியாக ஹீரோயின்களை தன்வசப்படுத்திய 5 காதல் மன்னர்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

முத்துராமன்: 70களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகர் முத்துராமன். மேலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவரை சினிமாவில் நவரச திலகம் என்றே அழைத்தனர். அதிலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் கே ஆர் விஜயா, சுஜாதா போன்ற நடிகைகளின்  மனம் கவர்ந்த நாயகனாகவே வலம் வந்தார். இதனைத் தொடர்ந்து காதலிக்க நேரமில்லை, கொடிமலர் போன்ற படங்களில் இரண்டாவது  கதாநாயகனாகவும் நடித்திருப்பார். இவர் நடித்த மற்ற படங்களை விடவும் காதலை மையமாக வைத்து வெளியான திரைப்படங்களில் அனைவரையும் உருக வைத்திருப்பார். 

Also Read: சாம்பார் என்ற பட்டத்தை வாங்கிய ஜெமினி கணேசன்.. பலரும் அறியாத காதல் மன்னனின் லீலைகள்

ஜெமினி கணேசன்: சினிமாவில் காதல் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்த நடிக்க கூடியவர்களில் கில்லாடியாக திகழ்ந்தவர் தான் ஜெமினிகணேசன். அதிலும் தனது நடிப்பின் மூலம் பெண்களை வசீகரம் செய்வதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்று சொல்லலாம். இவர் பொதுவாகவே சண்டைக் காட்சி நிறைந்த அதிரடியான படங்களில் நடிப்பதை விடவும், காதல் சம்பந்தமான படங்களில் மட்டுமே அதிக அளவில் நடித்து வந்தார். இதனாலேயே தன்னுடன் நடித்த நடிகைகளையும் கூட தனது நடிப்பின் மூலம் தன்வசப்படுத்தி இருந்தார். 

ரவிச்சந்திரன்: தமிழ் சினிமாவில் காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கு அடுத்து ஹீரோயின்களுக்கு பிடித்தமான நடிகராக வலம் வந்தவர் தான் ரவிச்சந்திரன். அதிலும் காதல் படங்கள் என்றாலே ரவிச்சந்திரனை நடிக்க வைக்கலாம் என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான காதல் படங்களில் நடித்து தனக்கென தனி முத்திரையை பதித்தார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமான இவர் தனது முதல் படத்திலேயே எக்கச்சக்க ரசிகர்களை கவர்ந்திருந்தார். 

Also Read: ஆங்கிலத்தில் சரளமாய் பேசக்கூடிய 5 நட்சத்திரங்கள்.. ஆங்கிலேயர்களின் வாயை அடைத்த அயன் லேடி

எஸ் எஸ் ராஜேந்திரன்: தமிழ் சினிமாவில் தனது அழகு, அழுத்தம்  திருத்தமான உச்சரிப்பு, தனித்துவமான நடிப்பு போன்றவற்றின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன். அதிலும் 85 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஆக்சன் படங்களை விடவும், காதல் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிக்கக்கூடிய நடிகராவார். இதன்  மூலமாகவே அதிகமான பெண் ரசிகர்களை கொண்டிருந்தார். 

சிவகுமார்: சினிமாவில் தனது வசீகரமான முகதோற்றத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவகுமார். தனது படங்களின் மூலம் ஒரு சில ஹிட் படங்களை மட்டுமே கொடுத்த இவர் காதல் காட்சிகளில் பின்னி பெடலெடுத்து இருப்பார். அதிலும் தனது நடிப்பின் மூலம் எக்கச்சக்கமான  ரசிகைகளையும் கொண்டிருந்தார்.

Also Read: மேடையில் மட்டும் தான் உங்கள் சமூக நீதியா.? சிவகுமார் குடும்பத்தால் அவதிப்பட்ட மாணவர்கள்

Trending News