Low Budget Movie Which Got High Profit: நிறை குடம் கூத்தாடாது என்று சொல்வார்கள். அது இப்போது வெளியாகும் சினிமா படங்களுக்கு சரியாக இருக்கும். 500 கோடி, 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் எல்லாம், சமீபத்தில் வந்த தடம் தெரியாமல் தியேட்டரை விட்டு காலி பண்ணி கொண்டிருக்கின்றன. அப்படியே சொல்லி கொள்ளும் அளவிற்கு வெற்றியை பெற்றாலும், மக்கள் மனதில் நிலைத்து நிற்பது இல்லை. சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் வித்தியாசமாக மாறி கொண்டிருக்கும் இந்த காலத்தில் வெறும் 4 கோடியை முதலீடாக போட்டு பத்து மடங்கு லாபம் பார்த்த 5 படங்களை பற்றி பார்க்கலாம்.
டிமான்டி காலனி: இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் வெளியான திகில் படம் தான் டிமான்டி காலனி. எந்த ஒரு மாயாஜால காட்சிகளும் இல்லாமல், மிரட்டும் இசை இல்லாமல் படம் பார்ப்பவர்களை மரண பயத்தின் உச்சிக்கு கொண்டு சென்று விடும். இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 4 கோடி தான். ஆனால் 55 கோடி வசூல் செய்து. நடிகர் அருள்நிதி வாழ்நாள் முழுவதும் படம் நடிப்பது எல்லாமே இந்த ஒரு படத்தின் முன்பு ஒன்னும் இல்லாமல் போய்விடும். அப்படி ஒரு தாக்கத்தை இந்த படம் ஏற்படுத்தியிருந்தது.
எல்கேஜி: கிராஸ்ட்டாக்கில் பிரபலமான ஆர்ஜே பாலாஜி சினிமாவுக்கு வந்த புதிதில் இவரெல்லாம் எதுக்கு சினிமாவுக்கு வந்துட்டு என்று தான் தோன்றியது. எல்கேஜி படத்தின் மூலம் ரசிகர்களின் அந்த எண்ணத்தை மொத்தமாக மாற்றி விட்டார். அரசியல் நையாண்டியை யதார்த்தமாகவும், தைரியமாகவும் எடுத்து சொன்ன இந்த படத்தின் மொத்த பட்ஜெட் நான்கு கோடி தான். ஆனால் 42 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
Also Read:ப்ளூ ஸ்டார்-ஐ விட 5 மடங்கு நஷ்டமான ஆர்ஜே பாலாஜி.. சம்பளத்தை அதிகரிக்க போடும் டிராமா
கோலமாவு கோகிலா: நயன்தாராவை தனி கதாநாயகியாக நடிக்க வைத்து நெல்சன் செய்த சம்பவம் தான் கோலமாவு கோகிலா. தமிழ் சினிமா மறந்திருந்த பிளாக் காமெடியை மீண்டும் ட்ரெண்ட் ஆக்கியது நெல்சன் தான். நயன்தாரா தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என நிரூபித்து கொள்ள இந்த இப்படம் பெரிய உந்துகோலாக அமைந்தது. 4 கோடியில் உருவான இந்த படம் 45 கோடி வரை வசூல் செய்தது,
போர் தொழில்: சரத்குமார் மற்றும் அசோக்செல்வன் கூட்டணியில் பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் தான் போர்த்தொழில். தொடர் கொலைகளை கண்டு பிடிக்கும் காவல் அதிகாரிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படம் ரிலீசாகி இரண்டு மாதங்கள் வரைக்கும் தியேட்டரில் கூட்டம் அலை மோதியது. 4 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 60 கோடி வரை வசூல் செய்தது.
96: ஆட்டோகிராப் படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மீண்டும் பள்ளி காதலை நியாபகப்படுத்திய படம் 96. பள்ளிப்பருவ காதல், காதல் தோல்வி, திருமணம் ஆன காதலியை பல வருடங்கள் கழித்து சந்திப்பது என மொத்த உணர்ச்சிகளின் குவியலாக இந்த படம் இருந்தது. 4 கோடி பட்ஜெட்டில் எளிமையாக உருவாக்கப்பட்ட இந்த படம் 40 கோடி வரை வசூல் செய்தது.
Also Read:வாய்ப்பு கொடுத்த தனுசையே பதம் பார்த்த நயன்தாரா.. மேடை ஏறி அசிங்கப்பட்டது தான் மிச்சம்