Malayalam Remake Movies: மலையாள சினிமாவை பொறுத்த வரைக்கும் அதன் எதார்த்தமும், திரைக்களமும் எப்போதுமே மற்ற மொழி சினிமாக்களை விட கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும். இதனாலேயே பலதரப்பட்ட ரசிகர்களும் மலையாள சினிமாவை விரும்பி பார்ப்பார்கள். ஆனால் அதே கதையை சில நேரம் ரீமேக் செய்யும்பொழுது படம் தோல்வி அடையவும் வாய்ப்புகள் அதிகம். அப்படி மலையாளத்தில் செம ஹிட் அடித்த இந்த ஐந்து படங்களை தமிழில் ரீமேக் செய்து, அந்த படங்கள் மொத்தமாய் மண்ணை கவ்வி இருக்கின்றன.
பெங்களூர் நாட்கள்: பகத் பாசில், நஸ்ரியா நசீம், நிவின் பாலி, துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் பெங்களூரு டேஸ். இந்த படத்தை அப்படியே தமிழில் பெங்களூரு நாட்கள் என்ற பெயரில் மறுஆக்கம் செய்தனர். இதில் ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருந்தனர். தமிழில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.
Also Read:தொடர்ந்து மூன்று ஹிட் கொடுத்த 5 சக்ஸஸ்ஃபுல் நடிகர்கள்.. பெயரை உடைத்து வெற்றி கண்ட ஜெயம் ரவி
குசேலன்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் பசுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் குசேலன். இந்த படம் மலையாளத்தில் கதபறயும்போல் என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த கேரக்டரில் தான் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தார். ஆனால் இந்த படம் மிகப்பெரிய பிளாப் ஆகியது.
நிமிர்: நடிகர் பகத் பாசிலுக்கு மலையாளத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் மகேஷிண்டே பிரதிகாரம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதை தமிழில் நிமிர் என்ற பெயரில் மறு ஆக்கம் செய்தனர். உதயநிதி ஸ்டாலின் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் நடித்த இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் எடுபடவில்லை.
Also Read:ட்ரெய்லர் ஓட மாயமாக மறைந்து போன 5 படங்கள்.. சந்தானத்திற்கு கை கொடுக்காத சர்வர் சுந்தரம்
பாஸ்கர் ஒரு ராஸ்கல்: நடிகர் அரவிந்த்சாமிக்கு தனி ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்த பிறகு, அவரை ஹீரோவாக வைத்து இயக்கிய திரைப்படம் தான் பாஸ்கர் ஒரு ராஸ்கல். இதில் அரவிந்த்சாமி உடன் அமலா பாலும் நடித்திருந்தார். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி அடைந்த இந்த படம், தமிழில் தோல்வி அடைந்தது.
கூகுள் குட்டப்பா: மலையாள சினிமா உலகில் மிகப்பெரிய சென்சேஷனை ஏற்படுத்திய திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். இந்த படம் பல விருதுகளை வென்றது. இந்த வெற்றியின் தாக்கத்தால் தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது. இதில் முக்கியமான ரோலில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் நடித்திருந்தார். பிக் பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா நடித்த இந்த படம் வெற்றி அடையவில்லை.