வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இந்த 6 மாசத்தில் ஓடிடியில் கெத்து காட்டிய 5 மலையாள படங்கள்.. 150 கோடி வசூலை பார்த்த பகத்

5 Malayalam films that hit OTT in these 6 months: இப்ப வருகிற படங்களை எல்லாம் பார்த்தால் கோபமும் வெறியும் தான் வருகிறது. அந்த அளவிற்கு அடிதடி, சண்டை, வெட்டு குத்து, வன்முறை என மன அழுத்தத்தை கொடுக்கக்கூடிய படங்கள் தான் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் தமிழில் வெளிவரும் படங்கள் முக்கால்வாசி வசூலில் லாபத்தை குவிக்க வேண்டும், ஒரு மாசாக இருக்க வேண்டும் என்று நோக்கத்தில் தான் படங்களை இயக்குகிறார்கள்.

அதன்படி அவர்கள் நினைத்தது போல வசூலில் வெற்றி கிடைத்தாலும் மக்களை திருப்திப்படுத்தும் வகையில் அமையாமல் போய்விட்டது. அதனால் வெறுத்துப்போன மக்கள் மற்ற மொழிகளில் ஏதாவது படங்கள் நன்றாக இருந்தால் அதை வரவேற்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படித்தான் சமீபத்தில் மலையாள படங்கள் மிது மக்களுக்கு மோகம் திரும்பி விட்டது. அந்த வகையில் இந்த ஆறு மாசத்தில் மக்களை அதிகமாக கவர்ந்த ஐந்து மலையாள படங்கள் தற்போது ஓடிடிலும் கெத்து காட்டி வருகிறது. அது என்ன படங்கள் என்று தற்போது பார்க்கலாம்.

மக்களை கவர்ந்த மலையாள படங்கள்

மஞ்சுமால் பாய்ஸ்: தமிழில் கமல் நடிப்பில் வெளிவந்த குணா படத்தின் சாயலை வைத்து மலையாளத்தில் மஞ்சுமால் பாய்ஸ் வெளிவந்திருந்தாலும், இந்த காலத்தில் ரசிகக்கூடிய நட்புக்கு இலக்கணமாக பிரண்ட்ஸ்களை வைத்து கொடுத்து மக்களை கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை எடுத்துக்காட்டுகிறது. இதில் கண்மணி அன்போடு காதலன் என்ற பாடல் நட்போடு இணைந்து வைக்கப்பட்டதால் பார்ப்பவர்கள் மனதில் இடம் பிடித்து விட்டது. அதனால் தமிழிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அப்படிப்பட்ட இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வந்திருக்கிறது.

பிரேமலு: பொதுவாக காதல் ரொமான்டிக் படத்திற்கு மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு கிடைக்கும். அதில் ஒரு நகைச்சுவையும் வைத்து மனசுக்கு இதமான காதலையும் புகுத்தி பிரேமலு படம் மக்களை கவர்ந்திருக்கிறது. எந்தவித மன அழுத்தமும் இல்லாமல் மனசுக்கு நிறைவாக ஒரு படத்தை பார்க்க வேண்டும் என்றால் நிச்சயம் இந்த படத்தை பார்க்கலாம். அப்படிப்பட்ட இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி இருக்கிறது.

ஆவேஷம்: ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் ஏப்ரல் மாதம் வெளியான ஆவேஷம் அதிரடி நகைச்சுவை திரைப்படம் ஆக மக்கள் மனதில் வெற்றி பெற்று இருக்கிறது. மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் இப்படத்தை கொண்டாடும் அளவிற்கு ரசிகர்கள் தூக்கி கொண்டாடினார்கள். 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 150 கோடிக்கும் மேல் வசூல் ஆகி இருக்கிறது. அந்த வகையில் முதன் முதலில் பகத் நடித்த படத்திற்கு இப்படம் மட்டுமே அதிக வசூல் கிடைத்திருக்கிறது. அந்த அளவிற்கு இதில் நடிப்பு அரக்கனாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

ஆடு ஜீவிதம்: தேசிய விருது வாங்கிய ப்ளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் அமலாபால் நடிப்பில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆடு ஜீவிதம் படம் வெளிவந்தது. இப்படம் கிட்டத்தட்ட 82 கோடியில் எடுக்கப்பட்ட நிலையில் மக்களை அதிகமாக கவர்ந்ததால் 160 கோடி வசூலை பெற்றுவிட்டது. அத்துடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் ரிலீஸ் ஆகியது. தற்போது இப்படம் நெட்ப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

குருவாயூரில் அம்பள நடையில்: இயக்குனர் விபின் தாஸ் இயக்கத்தில் பிரிதிவிராஜ் நடிப்பில் மே மாதத்தில் வெளியானது. இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாகவும், தமிழ் பாடல் ஆன அழகிய லைலா பாடலையும் வைத்து இங்கு உள்ள ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் குடும்பத்துடன் இருந்து வயிறு குலுங்க சிரிக்கும் வகையில் குடும்ப படமாக வெற்றி பெற்று இருக்கிறது. இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

ஓடிடியில் பட்டைய கிளப்பும் படங்கள்

Trending News