வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஓடிடி-யில் நடுநடுங்க வைத்த 5 மலையாள திரில்லர் படங்கள்.. நடிப்பு ராட்சசனாக மிரட்டும் ஜோஜி பாசில்

5 Malayalam Thriller Films That Got Nail Biting In OTT: ஒரு காலத்தில் பொழுதுபோக்குக்காக படத்தை பார்க்கும் படியாக இருந்தது. ஆனால் தற்போது படங்களை பார்ப்பதே பொழுது போக்கு தான் என்ற நிலைமைக்கு வந்துவிட்டது. அந்த அளவிற்கு படங்கள் வரிசையாக குவிந்து கொண்டே வருகிறது. காலம் மாறுவதற்கு ஏற்ப தற்போது டிஜிட்டல் உலகம் ஒவ்வொருவருடைய பாக்கெட்டிலுமே மொபைல் மூலம் வந்துவிட்டது.

அந்த வகையில் புது படங்களை பார்ப்பதற்கு திரையரங்குகளில் போய் தான் பார்க்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஓடிடி மூலமாகவும் புது புது படங்களை பார்க்க முடியும் என்பதால் ஒவ்வொரு வாரமும் போட்டி போட்டுக் கொண்டு படங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் ஓடிடி-மூலம் பார்த்த சில படங்கள் த்ரில்லர் படங்களாகவும், பார்க்கும் பொழுதே நகம் கடிக்கும் அளவிற்கு ஒரு பயத்துடனே பார்க்கும் மிரட்டலான படங்களும் இருக்கிறது. அந்த படங்களை பற்றி பார்க்கலாம்.

வைரஸ்: ஆஷிக் அபு இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வைரஸ் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் குஞ்சாக்கோ போபன், இந்திரஜித் சுகுமாரன், ஆசிப் அலி போன்ற நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது அறியப்படாத வைரஸின் அறிகுறியால் அவதிப்பட்டு சில மணி நேரங்களில் இறந்து போகும் ஒரு தொற்று நோய் கதையை மையப்படுத்தி இருக்கும். மேலும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் பின்னணியில் ஒரு மர்ம கதை இருப்பதால் அதை பார்க்கும் பொழுது மிகவும் பயத்துடனே கதி கலங்க வைத்து விடுகிறது. இப்படம் ZEE5 மற்றும் Aha தளங்களில் வெளியிடப்பட்டது.

Also read: 29 வருடங்களுக்கு முன் பிரபு நடித்த படம்.. அதே கதையை கொண்டு நடித்து ஹிட் கொடுத்த மோகன்லால்

ஜோஜி: திலீஸ் போத்தன் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு ஜோஜி திரைப்படம் வெளிவந்தது. இதில் பகத் பாசில், பாபுராஜ், சம்மி திலகன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை ஆனது அப்பாவின் கண்டிப்பு மிகவும் பயங்கரமாக இருப்பதால் இவரிடம் பேசவே பயப்படும் மூன்று மகன்களின் மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக காட்டப்பட்டு இருக்கும். அத்துடன் எப்படியாவது அப்பாவிடம் இருந்து சொத்தை பிடுங்கிக் கொண்டு தனித்தனியாக போக வேண்டும் என்று ஒவ்வொரு செயலும் கொஞ்சம் கொடுமையாக காட்டப்பட்டிருக்கும். இதில் பகத் பாஸில் ராட்சசன் ஆக மிரட்டலான நடிப்பை கொடுத்திருப்பார். இப்படம் அமேசான் பிரேம் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

கண்ணூர் ஸ்க்வாட்: ராபி வர்கீஸ் ராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் கண்ணூர் ஸ்குவாட் திரைப்படம் வெளிவந்தது. இதில் மம்முட்டி, வாசு, கிஷோர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் காவல்துறையை மையமாக வைத்து க்ரைம் திரில்லர் இன்வேஸ்டிகேஷன் விஷயங்களை காட்டும் விதமாக தனித்துவம் கொண்ட படைப்புகளாக வெளிவந்திருக்கும். 4 பேர் சேர்ந்து கண்ணூர் ஸ்குவாட் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதை இப்படத்தின் மையக்கருத்தாகும். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிடப்பட்டது.

கருடன்: அருண் வருமா இயக்கத்தில் கடந்த ஆண்டு கருடன் திரைப்படம் வெளிவந்தது. இதில் சுரேஸ்கோபி, பீஜு மோகன், சித்திக், ஜெகதீஷ், அபிராமி போன்ற பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை ஆனது ஒரு மாணவி உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதால் அதனை தட்டிக் கேட்கும் விதமாக சட்டத்தில் மோதும் கதைகளை மையப்படுத்தி காட்டப்பட்டிருக்கும். இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது.

த்ரிஷ்யம்: ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு திரிஷ்யம் திரைப்படம் வெளிவந்தது. இதில் மோகன்லால், மீனா, ஹன்சிபா ஹாசன் போன்று பலரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை ஆனது தன் மகளை தவறான நோக்கத்தில் வீடியோ எடுத்ததை கண்டிக்கும் விதமாக அம்மா செயல்படும் பொழுது எதிர்பாராத விதமாக ஒரு இறப்பு ஏற்படுகிறது. இதை தெரிந்த பிறகு குடும்பத்துடன் அதை மறைக்கும் விதமாக கதை மற்றும் காட்சிகள் ஒவ்வொன்றும் சஸ்பென்ஸ் ஆகவே கொண்டு போகப்பட்டிருக்கும்.

Also read: கமலால் ஒரே படத்தால் காணாமல் போன தயாரிப்பாளர்.. மீண்டும் கை பிடித்து தூக்கி விடும் சூப்பர் ஸ்டார் மோகன்லால்

Trending News