வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நிச்சயதார்த்தத்தோடு சோலி முடிந்த 5 திருமணம்.. டேட்டிங் உறவால் நின்று போன த்ரிஷா கல்யாணம்

பிரபலங்களின் திருமணம் என்றாலே அதற்கு எதிர்பார்ப்புகள் அதிகம் எனில் ஒரு சில ஜோடிகள் மட்டுமே ஒன்று சேருகின்றனர். சினிமாவில் பயணிப்பதால் சில நிகழ்வுகளின் சம்பவங்களால் கருத்து வேறுபாடு ஏற்பட்ட விலகிப்போய் விடுகின்றனர்.

அதிலும் சினிமாவில் நிலைத்து நிற்பது என்பது கடினமான ஒன்று. அவ்வாறு திருமணத்திற்கு முன்பே தன் கேரியருக்கு முட்டுக்கட்டை போடும் சம்பவத்திற்கு உடன்படாது கல்யாணமே வேண்டாம் என்ற முடிவிற்கு வந்து விடுகின்றனர். அவ்வாறு நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணத்தை நிறுத்திய 5 நடிகர்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: ஏ ஆர் முருகதாஸை ஏமாற்றிய தமிழ் நடிகர்கள்.. மீண்டும் தூக்கி போட்டு ஹிந்திக்கு போய்விட்டார்.!

த்ரிஷா- வருண்: பிரபல நடிகை ஆன த்ரிஷா, தொழிலதிபரான வருணை திருமணம் செய்ய போவதாக ஒப்புக்கொண்டு இவர்களின் நிச்சயதார்த்தம் 2015 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பின் த்ரிஷாவிடம் வருண், திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது என்பதை கூறியதன் காரணமாகவும் மற்றும் தனுஷ் உடன் த்ரிஷாக்கு இருந்த டேட்டிங் உறவால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்களின் திருமணம் முடிவிற்கு வந்தது.

விஷால் -அனிஷா: 2019 ஆம் ஆண்டு பிரபலங்களின் முன்னிலையில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விஷாலின் திருமணம் குறித்து பல எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் இவர் வரலட்சுமி உடன் நெருக்கம் காட்டியது பிடிக்காது கருத்து வேறுபாடு காரணமாக திருமணத்தை நிறுத்தி விட்டார் அனிஷா.

Also Read: வீரன் படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு இப்படி ஒரு அநீதியா.. செய்தியாளர்களுக்கு கொடுத்த செம டோஸ்

ராஷ்மிகா மந்தனா- ரக்ஷத்: புஷ்பா, ஸ்ரீ வாலி படத்தின் நடிகை ஆன ராஷ்மிகா மந்தனா மற்றும் கன்னட நடிகர் ஆன ரக்ஷித்தின் நிச்சயதார்த்தமும் 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன்பின் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் ஒத்து போகாததால் 2018ல் தனது திருமணம் இவருடன் நடைபெறாது என்பதை அறிவித்தார் ராஷ்மிகா மந்தனா.

நயன்தாரா -பிரபுதேவா: இவர்கள் இருவரின் நட்பும் காதலாக மலர்ந்து அதன் பின் 2009ல் திருமணம் செய்து கொள்ள போவதாக வதந்தி வெளியானது. இந்த இடைப்பட்ட வேலையில் பிரபுதேவாவின் மனைவியான ராம்லதா ஏற்படுத்திய பிரச்சனையைக் கண்டு நயன்தாரா பிரபுதேவாவை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வீரன் படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு இப்படி ஒரு அநீதியா.. செய்தியாளர்களுக்கு கொடுத்த செம டோஸ்

தர்ஷன்- சனம் ஷெட்டி: சனம் ஷெட்டி மற்றும் தர்ஷனின் நிச்சயதார்த்தம் 2019ல் நடைபெற்றது. அதன் பின் தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் பின் சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தார்கள். இதை மேற்கொண்டு சனம் ஷெட்டி தர்ஷன் மீது போலீஸ் புகார் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News