புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கிராமத்து கெட்டப்பில் கலக்கிய 5 மாடர்ன் ஹீரோக்கள்.. தூக்கு துரையாக மாஸ் காட்டிய அஜித்

ஹீரோக்களை பொறுத்தவரை என்னதான் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ஒரு சில கெட்டப்பில் தான் மக்களின் நெஞ்சில் நீங்காது நிற்கின்றனர். அந்த வகையில் ஒரு சில எளிமையான உடைகளே கதாபாத்திரத்திற்கு மாசாகவும், பொருத்தமாகவும் அமைந்துவிடும்.

பெரும்பாலும் ஆண்கள் வேஷ்டி சட்டையில் இருக்கும் தோற்றத்திற்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு. அந்த வகையில் கிராமத்து கெட்டப்பில் கலக்கிய ஐந்து மாடர்ன் ஹீரோக்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: ஜெயிலர் படத்தால் எகிறிய சம்பளம்.. விஜய்க்கு டஃப் கொடுக்க போகும் சூப்பர் ஸ்டார்

விஜய்: 2017 அட்லி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மெர்சல். இப்படத்தில் விஜய், காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் மூன்று மாறுபட்ட வேடத்தில் நடித்திருப்பார் விஜய். அதிலும் கிராமத்து தோற்றத்தில் வெற்றிமாறானாக வந்த கதாபாத்திரம் மக்களை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். இவரின் இத்தகைய எதார்த்தமான தோற்றம் பெண்களைக் கவர்ந்தது அல்லாமல் இப்படத்திற்கு கூடுதல் வெற்றியையும் தேடி தந்தது என்றே கூறலாம்.

அஜித்: 2019ல் சிவா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் விஸ்வாசம். இப்படத்தில் அஜித், நயன்தாரா, அனிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் முழுக்க வேட்டி சட்டையில் எதார்த்தமான மற்றும் எளிமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் அஜித். அவை அவருக்கு கூடுதல் அழகை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும். மேலும் இப்படத்தில் தூக்கு துரை கதாபாத்திரத்தில் வரும் அஜித் வெள்ளை வேஷ்டியில் இடம்பெறும் சண்டை காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்த ஒன்றாகும்.

Also Read: அஜித்துக்கு நெருக்கமான 5 பிரபலங்கள்.. இவங்க 2 பேர் இல்லாத அஜித் படமே இல்ல!

விஷால்: 2016ல் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மருது. இப்படத்தில் விஷால், ஸ்ரீதிவ்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தில் இவர் எளிமையான இல்ல தலைவன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவரின் எதார்த்தமான, மாசான தோற்றம் படத்தில் ரசிகர்களை கவர்ந்த விதமாக அமைந்தது.

கார்த்தி: 2018ல் சூர்யாவின் தயாரிப்பில் வெளிவந்த படம் தான் கடைக்குட்டி சிங்கம். இப்படத்தில் கார்த்தி, சாயிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்தில் கார்த்தி கூட்டு குடும்பத்தில் தன் சொந்த பந்தங்களோடு பாசத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் வேட்டி சட்டையில் வரும் காட்சிகள் இப்படத்தில் மாசாக அமைந்திருக்கும். மேலும் இவரின் எதார்த்தமான நடிப்பு இந்த படத்திற்கு கூடுதல் சிறப்பை பெற்று தந்தது.

Also Read: விஜய் படங்களை மட்டும் விரும்பும் இயக்குனர்.. வெறித்தனமாக மாறிய மாரி செல்வராஜ்

சிவகார்த்திகேயன்: 2019ல் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் நம்ம வீட்டு பிள்ளை. இப்படத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் தங்கை பாசம் மிகுந்த எளிமையான அண்ணனாக வேட்டி சட்டையில் வலம் வந்திருப்பார் சிவகார்த்திகேயன். அதிலும் என்னதான் மாடர்ன் உடையில் நடித்திருந்தாலும் இந்த கிராமத்து உடைக்கென்று ஒரு சிறப்பு உண்டு என்பதை உணர்த்தும் விதமாக இப்படம் இவருக்கு சிறந்த பெயரை பெற்று தந்தது.

அவ்வாறு ஹீரோக்கள் கோர்ட், சூட்டில் வரும் காட்சிகளை காட்டிலும் கிராமத்து உடைகளே மாசாக தோற்றம் அளிக்கிறது.

Also Read: அஜித் விஜய்க்கு அடுத்த வரிசையில் இருக்கும் ஐந்து ஹீரோக்கள்.. தொடர் தோல்வியால் வாய்ப்பு இழந்த விக்ரம்

Trending News