Actor Dhanush: தமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் கதைகளுக்கென்று எப்போதுமே சிறப்பான வரவேற்பு உண்டு. ஆனால் இது போன்ற படங்கள் கத்தி மேல் நடக்கும் நிலைதான். ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாது. நிறைய முன்னணி ஹீரோக்கள் நடித்த கதைகள் கூட எதிர்பாராத விதமாக மண்ணை கவ்வி இருக்கின்றன. இந்த ஐந்து படங்களும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியடைந்த கேங்ஸ்டர் படங்கள் தான்.
புதுப்பேட்டை: துள்ளுவதோ இளமை மற்றும் காதல் கொண்டேன் போன்ற கதைகளை எடுத்துக் கொண்டிருந்த செல்வராகவன் முதன் முதலில் எடுத்த கேங்ஸ்டர் திரைப்படம் தான் புதுப்பேட்டை. இந்த படம் ரிலீஸ் ஆனபோது அந்த அளவுக்கு எடுபடவில்லை. வழக்கமான செல்வராகவன் படம் போல் ரிலீஸ் ஆகி பல வருடங்கள் கழித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக தற்போது காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அஞ்சான்: இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா மற்றும் சமந்தா நடித்த திரைப்படம் அஞ்சான். வழக்கமான டான் கதைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியானது. சூர்யா அதிரடி ஆக்சன் ஹீரோவாக கலக்கி இருந்தாலும் அஞ்சான் படம் பொருளாதார ரீதியாக தோல்வியடைந்தது.
ஜகமே தந்திரம்: கிராமத்திலிருந்து வெளிநாடு செல்லும் தனுஷ் அங்கே இருக்கும் கேங்ஸ்டர் கூட்டத்தோடு இணைந்து செயல்படும் கதை தான் ஜகமே தந்திரம். இந்தப் படம் ரிலீசுக்கு முன்பு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திரைக்கதை ரசிகர்களுக்கு திருப்திகரமாக அமையாததால் தோல்வி அடைந்தது.
மீகாமன்: இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா மற்றும் ஹன்சிகா இணைந்து நடித்த திரைப்படம் மீகாமன். இந்த படம் கடந்த 2014 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. ஆர்யா இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டரை நடித்திருந்தார். இருந்தாலும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அப்பு: இயக்குனர் வசந்த் இயக்கத்தில் பிரசாந்த் மற்றும் தேவயானி நடித்த திரைப்படம் அப்பு. இந்த படத்தில் நடித்த பிரகாஷ்ராஜின் மகாராணி கேரக்டர் இன்றுவரை மிகப் பெரிய அளவில் பேசப்படுகிறது. டாக்ஸி டிரைவர் என்னும் ஆங்கில படத்தை தழுவி வந்த இந்த அப்பு திரைப்படம் தோல்வியடைந்தது.