சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

2023 அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட 5 படங்கள்.. எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கி சொதப்பிய தாஸ் அண்ட் கோ

5 Movies Most trolled: தற்போதைய காலத்தில் படங்கள் என்னதான் பிரமாண்டமாக எடுக்கப்பட்டாலும் அதை ஈசியாக ட்ரோல் செய்து அனைவரும் ரசிக்கும்படியாக அமைந்துவிடுகிறது. அதற்கு காரணம் படத்தை விட அவர்கள் ட்ரோல் செய்யப்பட்ட விஷயம் தான் மக்களை அதிகமாக கவருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து இப்பொழுது வரை வெளிவந்த ஏகப்பட்ட படங்களில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட  படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

ஆதி புரூஸ்: ஓம்ராவத் இயக்கத்தில் இந்த வருடம் ஜூன் மாதம் 16ஆம் தேதி பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ஆதிபிருஷ் திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படம் வெளிவருவதற்கு முன் இப்படத்தின் மீதான அதிக எதிர்பார்ப்புகளை வைத்து ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருந்தார்கள். அப்படி காத்துக் கொண்டிருந்த ரசிகர்களை ஏமாற்றும் வகையில் மோசமான விமர்சனத்தை பெற்றது. முக்கியமாக இதில் கிராபிக்ஸ் பண்ணியதை பார்க்கும் பொழுது சின்ன பிள்ளைகளுக்கு கார்ட்டூன் சேனலை பார்ப்பது போல் சொதப்பி இருக்கிறது என்று பலரும் ட்ரோல் செய்து கிண்டல் அடித்திருந்தார்கள்.

வாரிசு: இந்த ஆண்டு பொங்கல் தினத்தை ஒட்டி வாரிசு திரைப்படம் வெளிவந்தது. இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி மாஸாக இருந்திருக்கும். ஆனால் வாரிசு படத்தில் விஜய் செண்டிமெண்ட் நாயகனாக நடித்தது சுத்தமாக அவருக்கு செட்டே ஆகவில்லை என்பதற்கு ஏற்ற மாதிரி பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றார். அந்த வகையில் இனி விஜய் இந்த மாதிரி ஒரு கதையை தயவுசெய்து தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று பலர் ட்ரோல் பண்ணும் அளவிற்கு இருந்தது.

Also read: அஜித்திற்கு மாஸான கதையை ரெடி செய்த வெற்றிமாறன்.. வயித்தெரிச்சலில் தனுஷ், விஜய்

மாமன்னன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்த மாமன்னன் திரைப்படம் ஜூன் 29ஆம் தேதி வெளியானது. இதில் அரசியலையும், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதில் பாகுபாடு காட்டும் விதமாகவும் கதை அமைந்திருக்கும். இப்படத்திற்கு ஒரு பக்கம் வரவேற்பு கிடைத்தாலும் இன்னொரு பக்கம் கவுண்டமணி செந்தில் நடித்த ராக்காயி படத்தில் உள்ள காமெடி காட்சியை நினைவு படுத்தி இருக்கும். அந்த வகையில் இப்படம் வெளிவந்த பொழுது இந்த காமெடியை போட்டு தான் அதிக அளவில் ட்ரோல் பண்ணப்பட்டது.

மார்க் ஆண்டனி: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா கூட்டணியில் செப்டம்பர் 15ஆம் தேதி மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியானது. பல பிரச்சனைகளையும் தாண்டி இப்படம் வெளிவந்திருந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமோக வெற்றி பெற்றது. அந்த வகையில் இப்படத்திற்கு பாஸ்டிவ் விமர்சனங்கள் கிடைத்தாலும் அதை வைத்து ட்ரோல் செய்யப்பட்டது. முக்கியமாக சில்க் ஸ்மிதா மாறி இருக்கும் நடிகையை கூட்டிட்டு வந்து ரசிகர்களின் மனதை குளிர வைத்தது அதிகமாக வரவேற்கப்பட்டது.

லியோ: லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது. அதற்கு காரணம் லோகேஷின் கதை. ஆனால் படத்தை பார்த்த பிறகு பெருசாக ஒன்னும் சொல்லும் படி இல்லை. அதுவும் இரண்டு ஜாம்பவான்கள் இணைந்தும் இந்த படம் எடுபடவில்லை என்று ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த வருடம் விஜய் நடிப்பில் வெளிவந்த இரண்டு படமுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கி விட்டது என்று சொல்லலாம்.

Also read: விஜய் பீஸ்ட் பாட்டிக்கு இவ்வளவு திறமையா.. உச்சகட்ட வருத்தத்தில் திரையுலகம்..!

Trending News