திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கடைசி நேரத்தில் ஹீரோவை மாற்றிய 5 படங்கள்.. அட ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்க வேண்டிய ஹீரோ இவரா!

Director Logesh Kanagaraj: சினிமாவில் ஒரு சில படங்களின் கதைகள் முழுக்க முழுக்க ஒரு ஹீரோவை மனதில் வைத்து எழுதப்பட்டு பின்னர் ஒரு சில காரணங்களால் வேறு ஹீரோ மாற்றப்பட்டு படம் எடுக்கப்பட்டு இருக்கும். அதன் பின்னர் இந்த விஷயம் வெளியில் தெரிய வரும் போது ரசிகர்களுக்கே ரொம்ப ஆச்சர்யமாக இருக்கும். அப்படிதான் இந்த ஐந்து படங்களில் கடைசி நேரத்தில் ஹீரோக்கள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

டான்: இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் டான். இந்த படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் காமெடி காட்சிகள் இன்றுவரை பிரபலமாக இருக்கின்றனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கேரக்டரில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருந்து இருக்கிறது. ஆனால் இந்த படத்தின் கதையை ரிஜெக்ட் செய்து இருக்கிறார்.

Also Read:வாடிவாசலுக்கு தொடர்ந்து வரும் பிரச்சனை.. சூர்யாவுக்கு கட்டம் சரியில்லையோ

கைதி: இயக்குனர் லோகேஷ் கனகராஜை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமாக்கிய திரைப்படம் கைதி. கார்த்திக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இந்த படம், முதலில் அவருக்காக எழுதியதே இல்லையாம். நடிகர் மன்சூர் அலிகானுக்காக லோகேஷ் கனகராஜ் எழுதி, தவிர்க்க முடியாத காரணத்தால் கார்த்தி நடித்திருக்கிறார்.

தூள்: நடிகர் விக்ரமை அதிரடி ஆக்சன் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய திரைப்படம் தூள். 2003 ஆம் ஆண்டு தூள் மற்றும் சாமி திரைப்படங்கள் நடிகர் விக்ரமை வெற்றியின் உச்சத்திற்கு கொண்டு சென்றன. ஆனால் தூள் திரைப்படத்தின் கதை தளபதி விஐய்க்காக தான் முதலில் எழுதப்பட்டு இருக்கிறது. கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த படத்தில் விக்ரம் நடித்திருக்கிறார்.

Also Read:கங்குவா படத்தில் சூர்யாவை மிரட்ட வரும் கேஜிஎஃப் நடிகர்.. சரியாக தூண்டில் போட்ட சிறுத்தை சிவா

விக்ரம்: உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வெற்றியை பெட்ரா திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சந்தனம் என்னும் கேரக்டரில் நடித்திருப்பார். இந்த கேரக்டருக்காக முதலில் லாரன்ஸிடம் தான் கதை சொல்லப்பட்டு இருக்கிறது. கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவரால் நடிக்க முடியவில்லை.

விக்ரம் படத்தின் கிளைமாக்சில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுத்த கேரக்டர் ரோலக்ஸ். நடிகர் சூர்யாவை இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் பார்க்காத நெகட்டிவ் கேரக்டரில் காட்டியிருந்தார் லோகேஷ். இந்த கேரக்டருக்கு முதலில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரனை நடிக்க வைக்க தான் திட்டமிட்டு இருக்கிறார் இயக்குனர். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அவரை அணுக முடியாமல் போயிருக்கிறது.

Also Read:விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய சூர்யா.. சைலண்டாக நடந்த மீட்டிங்

Trending News