சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

துரோகத்தால் நண்பனின் காதலியை வளைத்து போட்ட தனுஷின் 5 படங்கள்.. கொக்கி குமாரு செய்த கேவலமான வேலை

5 Movies of Dhanush lusted friend’s girlfriend:  பொதுவாக படங்களில் ஹீரோவுக்கு இணையாக கதாநாயகிகள் ரொமான்டிக்காவும், காதல் காட்சிகளையும் அதிகமாக இடம்பெறுவார்கள். ஆனால் தனுஷின் முக்கால்வாசி படங்களில் அவர் காதலித்து கல்யாணம் பண்ணுவது மற்றும் ஆசைப்படுவது அனைத்தும் இவரின் நண்பரின் காதலியாக தான் இருக்கும். தற்போது அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.

புதுப்பேட்டை: தனுஷ் கேரியரில் மிகவும் ஸ்பெஷல் ஆன படம், முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டிய திரைப்படங்களில் அதிகமான இடத்தை பிடித்தது புதுக்கோட்டை. இதில் நண்பரின் தங்கையாக இருக்கும் சோனியாவின் மீது ஆசைப்பட்டு அவரை கல்யாணம் பண்ணிக் கொள்வார். அதே நேரத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்த சினேகாவையும் கல்யாணம் செய்திருப்பார்.

மயக்கம் என்ன: செல்வராகவன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு மயக்கம் என்ன திரைப்படம் வெளிவந்தது. இதில் தனுஷ், ரிச்சா கங்கோபாத்தியாய், சுந்தர் ராமு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் நண்பரின் காதலியாக டேட்டிங்கில் இருந்த ரிச்சா மீது தனுஷ் ஆசைப்பட்டு நண்பருக்கு துரோகம் செய்யும் வகையில் அவரை மயக்கி திருமணம் செய்து கொள்வார்.

Also read: தனுஷை வெறியேத்த ரஜினி பொழிந்த பாராட்டு மழை.. எதிரிக்கு எதிரி நண்பனாக கூட்டு சேர்ந்த Sk

யாரடி நீ மோகினி: மித்ரன் ஜவகர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு யாரடி நீ மோகினி திரைப்படம் வெளிவந்தது. இதில் தனுஷ், நயன்தாரா, கார்த்திக் குமார், ரகுவரன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ஆரம்பத்தில் நயன்தாரா நண்பருக்கு நிச்சயமானவர் என்பது தெரியாமல் துரத்தி துரத்தி காதலிப்பார். அடுத்து உண்மை தெரிந்த பிறகும் நயன்தாராவை கடைசியில் திருமணம் செய்து கொள்வார்.

குட்டி: மித்ரன் ஜவகர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் குட்டி திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் ஸ்ரேயா வேறு ஒருவரை காதலித்து வருவார். அது தெரிந்தும் தனுஷ் என்னுடைய காதல்தான் பெருசு என்று நிரூபிக்கும் விதமாக ஸ்ரேயா மனதை மாற்றி காதலில் விழ வைப்பார். கடைசியில் ஸ்ரேயாவை காதலித்த நண்பர் ஏமாந்து போய் நிற்பார். தனுஷின் காதல் வெற்றி பெற்றுவிடும்.

கேப்டன் மில்லர்: இந்த ஆண்டு பொங்கலையொட்டி கேப்டன் மில்லர் படம் வெளிவந்தது. இதில் பிரியங்கா மோகன் தனுசைகாதலிப்பார். ஆனால் சூழ்நிலை காரணமாக பிரியங்கா மோகன் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வார். அதன் பிறகும் பிரியா மோகன் மீது மயக்கத்தில் சுற்றித்திரிவார் தனுஷ்.

Also read: தனுசுக்கும் ஜிவி பிரகாசுக்கும் இவ்வளவு பிரச்சனை இருக்கா.? 2 ஒல்லி பசங்களும் ஆடிய ஆட்டம்

Trending News