திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

முழுக்க முழுக்க காமெடியில் வெளிவந்த ரஜினியின் 6 படங்கள்.. வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் எஸ்கேப் ஆன தலைவர்

Actor Rajini: ரஜினி எத்தனையோ கேரக்டரில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அதிலும் சில படங்களில் முழுக்க முழுக்க காமெடியனாக மாறி படம் பார்க்கும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட இவருடைய படங்களைப் பற்றி நாம் பார்க்கலாம்.

தில்லுமுல்லு: கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு தில்லுமுல்லு திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, தேங்காய் சீனிவாசன், நாகேஷ், பூர்ணம் விஸ்வநாதன், சௌகார் ஜானகி, மாதவி மற்றும் பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் ரஜினி, வேலைக்காக முதலாளியிடம் பொய் சொல்லி அதை சமாளிப்பதற்காக செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் நகைச்சுவையாக அமைந்திருக்கும். அதற்காக இரண்டு சகோதரர்கள் என்று பொய் சொல்லி தில்லுமுல்லு செய்யும் கேரக்டரில் ரஜினி நடித்திருப்பார்.

Also read: ரஜினியின் டயலாக்கை அட்ட காப்பி அடித்த தளபதி.. மாணவர்களின் முன்னிலையில் உடைந்த சஸ்பென்ஸ்

அன்னை ஓர் ஆலயம்: ஆர் தியாகராஜன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு அன்னை ஒரு ஆலயம் திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, மோகன் பாபு, மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை ஆனது ஒரு குட்டி யானை அதனுடைய தாயைப் பிரிந்து தவித்து வரும் நிலையில் அதற்கு உதவி செய்யும் விதமாக கதை அமைந்திருக்கும். அதற்காக இவர் செய்யும் அனைத்து தந்திரமான விஷயங்களைப் பார்க்கும் பொழுது காமெடியாக அமைந்திருக்கும்.

ராஜாதி ராஜா: ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு ராஜாதி ராஜா திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, ராஜசேகர் மற்றும் சின்னராசு என்று இரண்டு கேரக்டரில் நடித்திருப்பார். இவருடன் நதியா, ராதா, ராதாரவி மற்றும் ஜனகராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் ராஜசேகர் என்பவர் சீரியஸான கேரக்டரிலும், சின்னராசு என்ற கேரக்டரில் இவர் வாழைப்பழத்தை இவருடைய காதலியின் பிறந்தநாள் பரிசாக கொண்டு வரும் போது அதை ஆனந்தராஜ் ஆட்டையை போட்டு சாப்பிட்டு வெறும் தோலை மட்டும் இவரிடம் கொடுத்து விடும் காட்சியில் காமெடியில் கலக்கி இருப்பார்.

Also read: ரஜினியை செருப்பால் அடிப்பேன் என கூறிய இயக்குனர்.. நாகேஷை காட்டி திருத்திய சம்பவம்

ராஜா சின்ன ரோஜா: எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு ராஜா சின்ன ரோஜா திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினிகாந்த், ரகுவரன், கௌதமி, எஸ்எஸ் சந்திரன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் தன்னுடைய முதலாளிக்கு கண் தெரியாது என்று நினைத்து கௌதமியிடம் ஜொள்ளு விடும் காட்சியைப் பார்ப்பதற்கு நகைச்சுவையாக அமைந்திருக்கும். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்று 175 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது.

வீரா: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வீரா திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினிகாந்த், மீனா, ரோஜா, ஜனகராஜ், செந்தில் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ரஜினி, இரண்டு பேரைத் திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக செய்யும் ஒவ்வொரு சூழ்ச்சியும் நம்மை சிரிக்க வைத்து ரசிக்கும் படியாக அமைந்திருக்கும். அதிலும் கோவிலில் மீனாவுடன் இருப்பதை ரோஜா பார்த்து விடக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக போகும்போது கட்டின வேட்டி அவிழ்ந்தது கூடத் தெரியாமல் எஸ்கேப் ஆகும் காட்சி மிகவும் நகைச்சுவையாக இருந்தது.

தர்மத்தின் தலைவன்: எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு தர்மத்தின் தலைவன் திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினிகாந்த், பிரபு, சுகாசினி, குஷ்பூ மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரஜினி, தமிழ் கல்லூரி பேராசிரியராக ஞாபக மறதி குறைவான கேரக்டரில் நடித்திருப்பார். அதனால் சில கேளிக்கையான விஷயங்கள் இவர் மூலம் நடைபெறும். அதாவது அவசரத்தில் கிளம்பும்போது வேட்டியை கூட மறந்துவிட்டு வெளியே போனதும் இவர் பின்னாடி நாய் தொரற்றி வருவது, அத்துடன் இவருடைய வீட்டிற்கு பதிலாக மற்றொருடைய வீட்டிற்கு செல்வதும், இப்படி தொடர்ந்து ஞாபக மறதியால் செய்யக்கூடிய சில விஷயங்கள் பார்க்க ரசிக்கும் படியாக அமைந்திருக்கும்.

Also read: 42 வருடமாய் ரஜினி சூப்பர் ஸ்டாராக இருக்க இதுதான் காரணம்.. யாராலயும் அசைக்க முடியாத சாம்ராஜ்யம்.!

Trending News