திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

ஹீரோவாக நடித்த பொற்காலத்தில் வில்லனாகவும் களமிறங்கிய சிவாஜியின் 5 படங்கள்.. ரங்கோன் ராதாவை மறக்க முடியுமா?

Actor Sivaji Acted Villan Role: பொதுவாகவே மக்கள் சொல்வது இந்த காலத்தில் வருகிறது எல்லாம் படமா? அந்த காலத்தில் படங்களில் உள்ள கதைகள் மாதிரி இப்பொழுதெல்லாம் எங்கே என்று அழுத்து போகிற அளவுக்கு படங்கள் இருக்கிறது என்று புலம்புகிறார்கள். அதற்கு அப்பாற்பட்டு நடித்தவர் தான் சிவாஜி.

இவருடைய வசனம், அவர் பேசும் போது அவரின் கண் பார்வை விழிகள், முகபாவனை மற்றும் உடல் மொழி இது அனைத்தையும் பார்ப்பதற்கே இரண்டு கண்கள் போதாது, என்று சொல்லும் அளவிற்கு அனைவர் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார். அப்படிப்பட்ட பொற்காலத்திலும் அவருக்கு வந்த வில்லன் கேரக்டரை சரிவர செய்து அதிலும் இவருடைய நடிப்புக்கு பாராட்டை வாங்கி இருக்கிறார். அப்படிப்பட்ட இவர் வில்லனாக நடித்த படங்களை பற்றி பார்க்கலாம்.

திரும்பி பார்: 1953 ஆம் ஆண்டு டிஆர் சுந்தரம் இயக்கத்தில் கருணாநிதி எழுதிய படம் தான் திரும்பிப் பார். இதில் சிவாஜி கணேசன், பண்டரிபாய், கருணாநிதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இதில் சிவாஜி அவருடைய வில்லத்தனமான நடிப்பை காட்டி இருப்பார். அதாவது இவருடைய கேரக்டர் இதில் பெண்களை மயக்கி அவர்களை தன் வசப்படுத்திக் கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Also read: சென்சார் போர்ட் எதிர்ப்பையும் மீறி வெற்றி கண்ட சிவாஜிகணேசன்.. ஒரே படத்தில் மாபெரும் புகழ் பெற்ற 2 ஜாம்பவான்கள்

அந்த நாள்: 1954 ஆம் ஆண்டு எஸ் பாலச்சந்தர் இயக்கத்தில் அந்த நாள் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் பாடல்கள், நடனம், சண்டை காட்சிகள் எதுவுமே இல்லாமல் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுதான். இப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரிபாய் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இதில் சிவாஜி நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

கூண்டுக்கிளி: டி ஆர் ராமண்ணா இயக்கத்தில் 1954 ஆம் ஆண்டு கூண்டுக்கிளி திரைப்படம் வெளிவந்தது. இதில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், பி எஸ் சரோஜா, டிடி குசில குமாரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள். இதில் சிவாஜி செய்த தவறுக்காக எம்ஜிஆர் சிறை தண்டனை அனுபவிப்பார். அப்பொழுது எம்ஜிஆரின் மனைவியை எப்படியாவது தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பல வழிகளில் துன்புறுத்தல் கொடுத்து இவருடைய வில்லத்தனமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.

Also read: சிவாஜி ரஜினி இணைந்து நடித்த 5 படங்கள்.. நேர்மைக்கு பெயர் வாங்கிய ஜஸ்டிஸ் கோபிநாத்

ரங்கோன் ராதா: 1956 ஆம் ஆண்டு இயக்குனர் காசிலிங்கம் இயக்கத்தில் கருணாநிதி எழுதி வெளிவந்த திரைப்படம் ரங்கோன் ராதா. இதில் சிவாஜி கணேசன், பானுமதி, எஸ் எஸ் ராஜேந்திரன், எம் என் ராஜம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சிவாஜி அவருடைய அண்ணி மீது கண் வைத்து அவரை திருமணம் செய்து கொள்வதற்காக பல வில்லங்கமான வேலைகளை செய்து நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

உத்தமபுத்திரன்: டி பிரகாஷ் ராவ் இயக்கத்தில் 1958 ஆம் ஆண்டு உத்தமபுத்திரன் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி, எம் கே ராதா, எம் என் நம்பியார் மற்றும் பத்மினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சிவாஜி, பார்த்திபன் விக்ரம் என்று இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒருவர் கனிவான மற்றும் நேர்மையான மனிதராகவும், மற்றொருவர் பேராசை மற்றும் திமிர் பிடித்த மனிதராக பல வில்லங்கங்களை செய்யக்கூடியவராக நடித்திருக்கிறார்.

Also read: சிவாஜிக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும் 2 நடிகர்கள்.. எந்த சந்தேகமாக இருந்தாலும் உரிமையாக பேசி தீர்த்துக் கொள்வார்

- Advertisement -spot_img

Trending News