திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வில்லியாக மிரட்டிய வரலட்சுமி சரத்குமாரின் 5 படங்கள்.. சுந்தரை மிரள விட்ட கோமளவல்லி

தமிழில் அழுத்தமான பல கதாபாத்திரங்களில் நடித்த வரலட்சுமி சரத்குமார் சில படங்களில் ஹீரோயின் ஆகவும் நடித்திருக்கிறார். ஆனால் அதில் எல்லாம் இவருக்கு கிடைக்காத அங்கீகாரம் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். ஆனாலும் தமிழ் சினிமா இதுவரை சரியாக இவரை பயன்படுத்தாமலே இருக்கிறது. அதனால் தெலுங்கு பக்கம் இவருடைய கவனம் சென்று பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து இவருடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் இவர் இதுவரை நடித்து வில்லியாக மிரட்டிய ஐந்து நெகடிவ் படங்களை பற்றி பார்க்கலாம்.

சண்டைக்கோழி 2: என் லிங்குசாமி இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு சண்டக்கோழி 2 திரைப்படம் வெளிவந்தது. இதில் விஷால், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது முதல் பாகத்திலிருந்து தொடரை சம்பந்தப்படுத்தும் விதமாக இருக்கும். இதில் வரலட்சுமி, பேச்சி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். விஷாலின் குடும்பத்தை பழிவாங்கும் விதமாக அனைவரையும் கொள்ள வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் கதாபாத்திரத்தில் நடித்தார்.

Also read: அப்பாவால் 2 சூப்பர் ஹிட் படங்களை தவறவிட்ட வரலட்சுமி.. அக்கட தேசத்தில் கொண்டாடப்படும் ஹீரோயின்

சத்யா: பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு சத்யா திரைப்படம் வெளிவந்தது. இதில் சிபி சத்யராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், மற்றும் சதீஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ஏசிபி அனுயா என்ற கேரக்டரில் வரலட்சுமி சரத்குமார் நடித்தார். அதாவது இவருக்கு குழந்தை இல்லை என்பதால் ரம்யாவின் குழந்தையை யாருக்கும் தெரியாமல் வைத்து வளர்த்து வருவார். இதை யாராவது தெரிந்து கொண்டால் அவர்களை கொலை செய்யும் அளவிற்கு கொஞ்சம் சைக்கோவாக நடித்திருப்பார். பிறகு இவரிடம் இருந்து குழந்தையை காப்பாற்றி ரம்யாவிடம் சேர்ப்பது தான் இப்படத்தின் கதை.

வீர சிம்ஹா ரெட்டி: கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் இந்த வருடம் பொங்கலை ஒட்டி வீர சிம்ஹா ரெட்டி தெலுங்கு திரைப்படமாக வெளிவந்தது. இதில் பாலகிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் பானுமதி என்ற கேரக்டரில் பிரதாப் ரெட்டியின் மனைவியாகவும், வீர சிம்ஹா ரெட்டியின் ஒன்றுவிட்ட சகோதரியாகவும் நடித்திருப்பார். இதில் பகை உணர்ச்சியுடன் அண்ணன் குடும்பத்தை பழிவாங்கும் ஒரு கொடூரமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

Also read: அவருக்கு ஜோடியாக நடிப்பீர்களா.? பட ப்ரோமோஷனில் பத்ரகாளியாக மாறிய வரலட்சுமி

கொன்றால் பாவம்: தயாள் பத்மநாபன் இயக்கத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதம் கொன்றால் பாவம் திரைப்படம் வெளிவந்தது. இதில் வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் நகைக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு இவரை நம்பி இவர் வீட்டில் தங்கும் சந்தோஷை கொலை செய்து எப்படியாவது அந்த நகையும் பணத்தையும் சுருட்ட வேண்டும் என்று நினைக்கிறார். இதற்கு ஏற்ற மாதிரி இவருடைய பெற்றோர்கள் மனதையும் மாற்றுகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் விறுவிறுப்பான கதையை கொண்டு நகர்கிறது.

சர்கார்: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு சர்கார் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய்க்கு எதிர்மறையான கேரக்டரில் கோமளவல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு தில்லு முல்லு வேலைகளையும் செய்து கடைசியில் பதவிக்காக இவருடைய அப்பாவை கொலை செய்யும் அளவிற்கு ரொம்ப மோசமான வில்லியாக நடித்திருப்பார். சுருக்கமாக சொன்னால் தளபதிக்கு ஆட்டம் காட்டிருப்பார்.

Also read: வீட்டை தேடி வந்த அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை.. பத்ரகாளியாய் மாறி பதிலடி கொடுத்த வரலட்சுமி

Trending News