புதன்கிழமை, நவம்பர் 6, 2024

4 கோடி சம்பளம், நடுத்தெருவில் விட்ட பிரபுதேவா.. என்னது கடைசியா நடிச்ச 5 படமும் சோலி முடிஞ்சிச்சா!

நடன இயக்குனராக சினிமாவில் நுழைந்து பல பரிமாணங்களை கொண்டிருந்தார் பிரபுதேவா. இவர் இயக்குனராக தளபதி விஜய்யை வைத்து இயக்கிய போக்கிரி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது பிரபுதேவா நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். ஆனால் அவர் நடிப்பில் வெளியாகும் எல்லா படமுமே தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. மேலும் ஒரு படத்திற்கு 4 கோடி சம்பளம் மட்டும் வாங்கும் பிரபுதேவாவின் படம் ஒன்று கூட ஓடவில்லையே என்ற விரக்தியில் தயாரிப்பாளர்கள் உள்ளனர்.

மெர்குரி : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2018 இல் வெளியான திரைப்படம் மெர்குரி. இப்படத்தில் பிரபுதேவா, சனந்த் ஷெட்டி, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் உடன் இணைந்து பென் இந்தியா லிமிடெட் தயாரித்திருந்தது. இப்படம் தோல்வியை சந்தித்தது.

சார்லி சாப்ளின் 2 : சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, பிரபு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சார்லி சாப்ளின் 2. இப்படத்தை டி சிவா தனது அம்மா கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்து இருந்தார். இப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களை சந்தித்தது.

பொன் மாணிக்கவேல் : ஏசி முகில் செல்லப்பன் இயக்கத்தில் கடந்த 2021 இல் வெளியான திரைப்படம் பொன் மாணிக்கவேல். இப்படத்தில் பிரபுதேவா, நிவேதிதா பெத்துராஜ் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றதுடன் படம் படுதோல்வி அடைந்தது.

மை டியர் பூதம் : ராகவன் இயக்கத்தில் இமான் இசையில் பிரபுதேவா, ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான திரைப்படம் மை டியர் பூதம். இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. குழந்தைகள் படமாக நகைச்சுவை கலந்த இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

பொய்க்கால் குதிரை : சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் மினி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவான படம் பொய்க்கால் குதிரை. இப்படத்தில் பிரபுதேவா, வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன், பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி போன்றோர் நடித்திருந்தனர். டி இமான் இசையமைத்திருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி படு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

- Advertisement -spot_img

Trending News