வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

வரலட்சுமி நடிப்பில் மிரள வைத்த 5 படங்கள்.. குலத்தை கருவறுக்க துடித்த பேச்சி

Actress Varalaxmi: தன் தந்தையின் ஒப்புதலுக்கு காத்திருந்து அதன்பின் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் வரலட்சுமி சரத்குமார். இவர் மேற்கொண்ட ஒரு சில படங்களிலும், நெகட்டிவ் ரோலுக்கு தான் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து உள்ளார்.

அந்த அளவிற்கு வில்லி கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார் வரலட்சுமி. இவர் சிம்புவுடன் இணைந்து நடித்த படமான போடா போடி படத்தில் அறிமுகமானவர். அவ்வாறு இருக்க இவர் மேற்கொண்டு மிரள வைத்த 5 படங்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read: இணையத்தில் காட்டு தீயாய் பரவும் உண்மையான தங்கலான் புகைப்படம்.. ஒரே ஒரு வெற்றிக்காக துடிக்கும் விக்ரம்

சர்க்கார்: 2018ல் ஆக்சன் திரைப்படம் ஆக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் சர்க்கார். இப்படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் கோமலவல்லி கதாபாத்திரத்தில் தன் நடிப்பினை சிறப்புற வெளிக்காட்டி இருப்பார் வரலட்சுமி. மேலும் இவர் ஏற்ற இத்தகைய கெட்டப் கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.

சண்டக்கோழி 2: 2018ல் லிங்குசாமி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் விஷாலுக்கு மல்லுக்கட்டும் கதாபாத்திரத்தில், குலத்தையே வேரோடு அழிக்க மிரளவைக்கும் கெட்டப்பில் பேச்சியாக அசத்திருப்பார் வரலட்சுமி. இப்படத்தில் இவர் நடிப்பு பெரிதும் பேசப்பட்டாலும், படம் கலவையான விமர்சனங்களையே பெற்று தந்தது.

Also Read: ஒரே வாரத்தில் போட்ட காசை எடுத்த போர் தொழில்.. குட்நைட் படத்தை சுக்கு நூறாக்கிய வியாபாரம்

சத்யா: 2017 பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் தெலுங்கு படத்தின் டப்பிங் படம் தான் சத்யா. இப்படத்தில் சிபி சத்யராஜ், வரலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்தில் இவரின் சைக்கோ கில்லர் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதை தொடர்ந்து ஹீரோவுக்கு டஃப் கொடுக்கும் கதாபாத்திரத்திலும் சிறப்புற அசத்திருப்பார்.

வீரசிம்ஹா ரெட்டி: சமீபத்தில் தெலுங்கில் கோபிச்சந்த் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் வீரசிம்ஹா ரெட்டி. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், பாலகிருஷ்ணா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் இணைந்து நடித்திருப்பார்கள். இப்படத்தில் அண்ணனிடம் பகை தீர்க்கும் தங்கையாக மாஸ் காட்டும் கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடித்திருப்பார்.

Also Read: 24 மணி நேரமும் தம்மு தான்.. மாமியின் மார்க்கெட் போக இது தான் காரணம்

கொன்றால் பாவம்: சமீபத்தில் கிரைம், திரில்லர் படமாக சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த படம் தான் கொன்றால் பாவம். இப்படத்தில் வரலட்சுமி ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், பணத்திற்காக இவர் மேற்கொள்ளும் வில்லத்தனம் பெரிதளவில் பேசப்பட்டது.

Trending News