செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

சிரிச்சு சிரிச்சு கண்ணீர் வரவழைத்த 5 படங்கள்.. போலி டாக்டராக இருந்து கமல் செய்த அட்டகாசம்

Best Comedy Movies: பொதுவாக நம்முடைய கவலைகளை மறக்கக்கூடிய எந்த விஷயங்களாக இருந்தாலும் அதைத் தேடி தான் நம் மனது அலைபாயும். அந்த வகையில் எல்லா கவலைகளையும் போக்கும் அளவிற்கு சில படங்கள் நகைச்சுவை கலந்து கொடுக்கப்பட்டிருக்கும். இந்த படங்களை பார்த்தாலே சிரித்து சிரித்து நம் கண்களில் கண்ணீர் வந்துவிடும். அந்த அளவிற்கு முழுக்க முழுக்க காமெடியை கொடுத்து இருப்பார்கள். அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.

சுந்தரா ட்ராவல்ஸ்: இயக்குனர் அசோகன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படம் வெளிவந்தது. இதில் முரளி, ராதா, வடிவேலு, பி வாசு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் முரளி மற்றும் வடிவேலு அவர்களின் இருப்பிடமாகவே பஸ்சை வடிவமைத்து அதில் டிராவல் பண்ணிக்கொண்டு செய்யும் காமெடி வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும். அத்துடன் மாப்பிள்ளையே கூட்டிட்டு வாரேன் சொல்லிட்டு அவருக்கு மேக்கப் பண்ணி விடும் விதம் இப்பொழுது நினைத்தால் கூட நமக்கு சிரிப்பு வந்துவிடும். . முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து வெளிவந்ததால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Also read: வெயிட்டான கேரக்டர்களில் நடிக்க மறுத்த 5 நடிகர்கள்.. முரளியால் தளபதிக்கு கிடைத்த மிகப்பெரிய திருப்பம்

கலகலப்பு: சுந்தர் சி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு கலகலப்பு திரைப்படம் வெளிவந்தது. இதில் விமல், சிவா, ஓவியா, அஞ்சலி மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் முழுவதுமே நகைச்சுவையாக அமைந்திருக்கும். முக்கியமாக அஞ்சு வெட்டி அழகேசன் மற்றும் வெட்டுப்புலி கேரக்டர் முழுமையான நகைச்சுவை உணர்வை கொடுத்திருப்பார்கள். மேலும் கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரும் ஒரே வீட்டில் சிக்கிக் கொண்டு டைமண்ட்காக முயற்சி செய்யும் விதம் சிரிச்சு சிரிச்சு வயிறு வலியை வந்துவிடும். அந்த அளவிற்கு செம காமெடியாக இருக்கும்.

வசூல்ராஜா எம்பிபிஎஸ்: இயக்குனர் சரண் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல், பிரபு, சினேகா, பிரகாஷ் ராஜ், நாகேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கமல் போலி டாக்டராக இருந்து ஆப்ரேஷன் தியேட்டருக்குள் சென்று கோழியை வைத்துக்கொண்டு செய்யும் காமெடி அல்டிமேட் ஆக இருக்கும். அத்துடன் பிரகாஷை முட்டாளாக்கும் காட்சிகளும் சிரித்து ரசிக்கும் படியாக இருக்கும்.

Also read: டாப் ஹீரோக்களை கஸ்டடிக்கு கொண்டு வந்த கமல்.. சிம்பு, சிவகார்த்திகேயனை அடுத்து சிக்கிய நடிகர்

ஃபிரண்ட்ஸ் : இயக்குனர் சித்திக் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு ஃபிரண்ட்ஸ் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், சூர்யா, தேவயானி, விஜயலட்சுமி, வடிவேலு மற்றும் ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் வடிவேலுவின் நேசமணி கேரக்டரை அனைவராலும் மறக்கவே முடியாத அளவிற்கு இவருடைய நகைச்சுவையை அசத்திருப்பார். அதிலும் தேவயானி வீட்டில் பெயிண்ட் அடிக்கும் போது வடிவேலு அந்த பெயிண்ட் டப்பாக்குள் விழுந்து எழுந்திருப்பது, எண்ணெய் ஊற்றி இருக்கு என்று தெரியாமல் வலிக்கு விழுவது இன்னும் இது போன்ற நகைச்சுவையான விஷயங்கள் படத்தில் முழுவதுமாக அமைக்கப்பட்டிருக்கும்.

பஞ்சதந்திரம்: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு பஞ்சதந்திரம் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமலஹாசன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், தேவயானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். முக்கியமாக இப்படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் ராம், மைதிலி, மேகி இந்தப் பெயர்கள் கேட்டாலே இப்படம் தான் ஞாபகத்துக்கு வரும். அதிலும் ஹோட்டலில் தேவயானி கூட கமல் இருந்து செய்யும் அட்ராசிட்டியை பார்க்கும் பொழுது சிரித்து சிரித்து நம் கண்களில் கண்ணீர் வந்து விடும். பிறகு கணவர்கள், மனைவிகளிடம் பொய் சொல்லிக்கொண்டு பேச்சுலர்ஸ் ஆக என்ஜாய் பண்ண நினைக்கும் காட்சிகள் அல்டிமேட் ஆக இருக்கும்.

Also read: செம குஷியுடன் விஜய் அசால்ட்டா நடித்த 5 படங்கள்.. கடைசி வரை சச்சினுடன் போட்டி போட்ட அய்யாசாமி

Trending News