வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அண்ணன் தம்பிகளின் பாசத்தை உருக வைத்த 5 படங்கள்.. தங்கச்சியை ராணி மாதிரி கொண்டாடிய சரத்குமார்

சினிமாவில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படங்கள் வந்தா மக்களிடம் அதுக்கென்று தனி வரவேற்பு எப்பொழுதும் இருக்க தான் செய்யும். அதிலும் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக காட்டி வந்த படங்களை பார்ப்பதற்கு அவ்வளவு திருப்தியாக இருக்கும். அந்த மாதிரி அண்ணன் தம்பிகளின் பாசத்தை வைத்து வந்த படங்களை பற்றி பார்க்கலாம்.

ஆனந்தம்: என். லிங்குசாமி இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு ஆனந்தம் திரைப்படம் வெளிவந்தது. இதில் மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் அண்ணன் தம்பிகளின் ஒற்றுமையை மையமாக வைத்து கடைசி வரை இவர்களுக்குள் பிரிவு வராதபடி கதை அமைந்திருக்கும். இப்படி அண்ணன் தம்பிகள் ஒருவர் மீது ஒருவர் பாசம் வைத்திருந்தாலும் ஒரு சமயத்தில் இவர்களுக்குள் வரும் மனக்கசப்பை சரி செய்து ஒற்றுமையாக இருப்பதே இக்கதையின் மையக் கருத்தாகும்.

Also read: ராகவா லாரன்ஸ் வலை வீசிய 4 நடிகைகள்.. வெளிப்படையாகவே டேமேஜ் செய்த ஹீரோயின்

மாயாண்டி குடும்பத்தார்: ராசு மதுரவன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு மாயாண்டி குடும்பத்தார் திரைப்படம் வெளிவந்தது. இதில் மணிவண்ணன், பொன்வண்ணன், சீமான், மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அண்ணன் தம்பிகள் நான்கு பேரும் திருமணம் செய்து கொண்டு கூட்டு குடும்பமாக வாழ்கின்றனர். பிறகு கடைசி தம்பியால் அண்ணிகள் ஒவ்வொருவரும் அவரை கண்டு கொள்ளாமல் இருப்பதை பார்த்து அண்ணன்கள் கோபப்படும் போது பிரச்சினை ஏற்படுவதை மையமாக வைத்து இக்கதை அமைந்திருக்கும். இப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. மற்றும்  பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை: வி.சேகர் இயக்கத்தில் 2000ம் ஆண்டு கூடி வாழ்ந்தால் கோடி நன்மை திரைப்படம் வெளிவந்தது. இதில் நாசர், குஷ்பூ, விவேக், கரண் வடிவேலு மற்றும் கோவை சரளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அண்ணன், அவருடைய தம்பிகளை வழிநடத்தும் விதமாக இவர் ஒருவரே வேலை பார்த்து வருவார். பிறகு இவர்கள் அனைவரும் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் பொழுது அவருடைய தம்பி சம்பாதிக்க ஆரம்பித்த பின் அவரால் வரும் ஒவ்வொரு பிரச்சனையை சமாளிக்கும் விதமாக இக்கதை எடுக்கப்பட்டிருக்கும்.

Also read: கதை கூட முக்கியமில்லை தம்பி தான் முக்கியம்.. பிரேம்ஜிக்குனு தனி கேரக்டர் வைத்த வெங்கட் பிரபுவின் 6 படங்கள்

வானத்தைப்போல: விக்ரமன் இயக்கத்தில் 2000ம் ஆண்டு வானத்தைப்போல திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், மீனா, பிரபுதேவா, லிவிங்ஸ்டன், வினிதா, கௌசல்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து தம்பிக்காக திருமணமே வேண்டாம் என்று தம்பியோட நலனுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணனின் கதையானது. இப்படம் 250 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வணிகரீதியாக தமிழில் பெரும் வெற்றி பெற்ற படமாக மாறியது.

சமுத்திரம்: கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு சமுத்திரம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் சரத்குமார், முரளி, மனோஜ், காவேரி, அபிராமி மற்றும் மனோபாலா ஆகியோர் நடித்தார்கள். இதில் அண்ணன் தம்பிகள் மூன்று பேரும் சேர்ந்து இவர்களுடைய தங்கையை ராணி மாதிரி பார்த்துக்கொண்டு அவர் மீது பாசத்தைக் காட்டி இருப்பார்கள். பிறகு அந்த தங்கையின் கல்யாணத்திற்கு பின் அவர் ஒவ்வொரு நாளும் கஷ்டப்படும் நிலைமைய பார்த்து அதை சரி பண்ணும் விதமாக இப்படத்தின் கதை அமைந்திருக்கும். இப்படம் கலவையான விமர்சனம் பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் ஆனது.

Also read: 90ஸ் கிட்ஸை மிரட்டிய மன்சூர் அலிகானின் 5 படங்கள்.. கேப்டனுக்கு டஃப் கொடுத்த வீரபத்திரன்

Trending News