வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

அக்கட தேசத்து படமாக இருந்தாலும் தமிழில் அதிர வைத்த 5 படங்கள்.. சக்கை போடு போட்ட காந்தாரா

Other Language Movies won the tamil: தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷமான 5 படங்கள் மக்களிடமிருந்து பெரிய வரவேற்பை பெற்று அவர்களால் எப்பொழுதுமே மறக்க முடியாத படமாக அதிர்வை ஏற்படுத்துகிறது. அதிலும் சில ரசிகர்கள் இந்த மாதிரி படங்கள் எல்லாம் தமிழில் எடுத்தால் இன்னும் அதிரிபுதிரியாக இருக்கும் என்று அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள்.

அப்படி தமிழ் சினிமாவையே புரட்டி போட்ட அக்கட தேசத்து படங்களை பற்றி பார்க்கலாம். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு கேஜிஎஃப் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழியிலும் ரிலீசாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. 50 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 250 கோடி வசூலை எட்டியது.

Also read: கேஜிஎஃப் இயக்குனருடன் திடீர் சந்திப்பு.. பிரபாஸை ஒரு கை பார்க்க தயாரான ஆண்டவர்

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவந்து மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. அடுத்ததாக காந்தாரா, இந்த படத்தின் பெயரை கேட்டாலே அனைவருக்கும் புல்லரிக்கும் வகையில் சக்கை போடு போட்டு பிரமிக்க வைத்தது. இயக்குனர் ரிஷாப் ஷெட்டி இயக்கத்தில் அவரே நடித்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம்.

இப்படம் கடந்த வருடம் இந்தியாவில் அதிக வசூல் செய்த நான்காவது படமாக கொடி கட்டி பறந்தது. ஆனால் இப்படம் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெருத்த லாபத்தை பார்த்த படமாக லிஸ்டில் சேர்ந்து விட்டது. இப்படம் 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கன்னட மொழியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Also read: காந்தாரா படத்தை வைத்து ஓட்டியதால் விலகும் சீரியல் பிரபலம்.. விஜய் டிவி டிஆர்பி-க்கு வைத்த பெரிய ஆப்பு

இதனைத் தொடர்ந்து மற்ற மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட்டது. அதனால இப்படத்திற்கு எல்லா பக்கமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் தமிழில் இப்படத்தை ரஜினிகாந்த் பார்த்துவிட்டு ரிஷாப் ஷெட்டியை போனில் பாராட்டு மழை பொழிந்திருக்கிறார். அடுத்ததாக மல்லிகாபுரம் என்ற மலையாள படம் கடந்த வருடம் வெளிவந்தது. இப்படம் சாமி ஐயப்பனை பற்றிய கதைகளாக வெளிவந்து நல்ல விமர்சனங்களை பெற்றது.

அடுத்ததாக மலையாளத்தில் 2018 என்கிற படம் இரண்டு மாதங்களுக்கு முன் வெளிவந்தது. இப்படம் 2018 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது கேரளாவில் நடந்த உண்மை கதையை முன்னுறுத்தி காட்டியது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து தி கேரளா ஸ்டோரீஸ் திரைப்படம் மே மாதம் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வந்தது. இப்படி அக்கட தேசத்து படங்கள் தமிழில் கொடி கட்டி பறந்தது.

Also read: நீ அடங்க மாட்டியா காந்தாரா சரவணா.. மிச்சர், பூந்தி வித்தவனுக்கு ஏண்டா இவ்வளவு பில்டப்

Trending News