வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

எத்தனை தடவை டிவியில் போட்டாலும் சலிக்காத 5 படங்கள்.. விஜய்க்கு திருப்புமுனை ஏற்படுத்திய 90ஸ் கிட்ஸ் படம்

பொதுவாக நமக்கு பிடித்த படங்களை தியேட்டர்களில் பார்த்து வந்த பிறகு மறுபடியும் பார்க்கணும் என்ற ஆசையை தூண்டும் அளவிற்கு சில படங்கள் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட படங்கள் டிவியில் போடும்போது பார்த்து ரசித்ததோடு மட்டுமல்லாமல் எத்தனை முறை டிவியில் போட்டாலும் சலிக்காமல் அந்தப் பாடத்தை பார்த்து ரசிக்கிற மாதிரி சில படங்கள் இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களில் ஐந்து படங்களை மட்டும் பார்க்கலாம்.

அந்நியன்: சங்கர் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் வெளிவந்தது. இதில் விக்ரம், சதா, பிரகாஷ்ராஜ் மற்றும் விவேக் ஆகியோர் நடித்தார்கள். இதில் விக்ரம் அம்பி, ரெமோ மற்றும் அந்நியனாக சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு அவருடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை மிகவும் ஆச்சரியப்படுத்தி இருப்பார். இப்படத்தை டிவியில் எத்தனை தடவை போட்டாலும் திரும்பத் திரும்ப பார்க்கக்கூடிய படமாக தான் இருக்கிறது.

Also read: திரிஷா விஷயத்தில் அலர்ட் ஆறுமுகமாயிருக்கும் விக்ரம்.. முத்துன கத்திரிக்காய்க்கும் மவுஸ் குறையல!

சந்திரமுகி: பி வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு சந்திரமுகி திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் ரஜினி டாக்டர் சரவணன் மற்றும் வேட்டையன் ராஜாவாக நடித்திருப்பார். இதில் ஜோதிகா சந்திரமுகியாக நடித்தார். இப்படம் 890 நாட்கள் திரையரங்குகளில் ஓடி பெரும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை பெற்றது. இப்படத்தை எத்தனை தடவை பார்த்தாலும் மறுபடியும் பார்க்க தூண்டும் படமாக இருக்கிறது.

அயன்: கே வி ஆனந்த் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு அயன் திரைப்படம் வெளிவந்தது. இதில் சூர்யா, தமன்னா, பிரபு ஆகியோர் நடித்தார்கள். இப்படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றார். அத்துடன் இந்தப் படத்தை பார்க்கும் பொழுது முதல் தடவை பார்ப்பது போலவே விறுவிறுப்பாக இருக்கும்.

Also read: தேரை இழுத்து தெருவுல விட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. திருட்டு சம்பவத்தால் வருமான வரி வரை சென்ற சோகம்

தசாவதாரம்: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு தசாவதாரம் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல் 10 வேடங்களில் கதாபாத்திரத்திற்கு ஏற்ப தோற்றங்களை மாற்றிக்கொண்டு நடிப்பின் உலக நாயகன் என்று சொல்வதற்கு ஏற்ப நடிப்பை நிரூபித்து காட்டி இருப்பார். இதில் இவருடன் அசின், ஜெயப்பிரதா, நெப்போலியன் ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தை பார்க்கும் பொழுது அந்த இடத்தை விட்டு நகர முடியாத அளவிற்கு ஒரே இடத்தில் இருந்து பார்க்க வைக்க கூடிய படமாக இருக்கும்.

கில்லி: தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு கில்லி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் தாமு ஆகியோர் நடித்தார்கள். இப்படம் கில்லி விளையாட்டை மையமாக வைத்து காதல், சண்டை என அனைத்தும் கலவையாக அமைந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம். இப்படத்தில் தான் விஜய் மற்றும் திரிஷா ஜோடியாக நடித்து வெளிவந்த முதல் திரைப்படம். இருவருக்குமே சினிமா கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்த படம். இப்படம் 90ஸ் கிட்ஸ்க்கு ஃபேவரிட் படமாக அமைந்தது. இப்படத்தை எத்தனை முறை டிவியில் போட்டாலும் சலிக்காமல் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக இப்பொழுது வரை இருக்கிறது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 200 நாட்களுக்கு மேல் ஓடி பிளாக் பாஸ்டர் ஆனது.

Also read: விஜய்யை வைத்து கேவலமான விளம்பரம் தேடும் விஷால்.. பப்ளிசிட்டியா இல்ல பதவியா, உஷாரா இருங்க

Trending News