சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

பக்கத்து வீட்டு பையன் போல் மணிகண்டன் கலக்கிய 5 படங்கள்.. மறக்கவே முடியாத ஜெய்பீம் ராசக்கண்ணு

Manikandan best 5 movies: ஒருவருக்கு நல்ல நேரம் வந்துவிட்டால் அவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பது உறுதியாகி விடும். அது போல தான் சமீபத்தில் நடிப்பின் திறமை மூலம் அனைவரையும் குட்நைட் படத்தின் மூலம் கவர்ந்து இழுத்தார் நடிகர் மணிகண்டன். இவர் இதற்கு முன்னதாக ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய கதாபாத்திரம் பெருசாக பேசும் படியாக அமையவில்லை. ஆனால் தற்போது இவருக்கு கிடைத்த அங்கீகாரம் மூலம் அந்த படங்கள் ஒவ்வொன்றும் பார்க்கும் பொழுது ரசிக்கும் படியாக இருக்கிறது. அந்தப் படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

ஜெய் பீம்: டிஜே ஞானவேல் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு ஜெய் பீம் திரைப்படம் வெளிவந்தது. இதில் சூர்யா, லிஜோமோல் ஜோஸ் மற்றும் மணிகண்டன் ராசக்கண்ணு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் கதையானது ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு எதிராக அரசு வன்முறை செய்ததை எதிர்த்து தட்டிக் கேட்கும் விதமாக இருக்கும். அந்த வகையில் இதில் ராசக்கண்ணுவை போலீசார் அடித்து சித்திரவதை செய்யும் காட்சிகள் அனைத்தும் பார்ப்பவர்கள் கண்ணில் இருந்து கண்ணீர் வர வைத்திருக்கும். அந்த அளவிற்கு நடிப்புக்காக எதார்த்தத்தை காட்டியிருப்பார்.

குட் நைட்: விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் கடந்த வருடம் குட் நைட் திரைப்படம் வெளிவந்தது. இதில் மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக் மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது புதிதாக திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகள், திருமணத்திற்கு பிறகு கணவர் குறட்டை விடும் சத்தத்தால் எந்த அளவிற்கு மனதார பாதிக்கப்படுகிறார் என்பதை காட்டும் விதமாக அமைந்திருக்கும். இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக இருந்தாலும் அனைவரும் ரசித்துப் பார்க்கும் வகையில் அமைந்திருக்கும்.

Also read: மணிகண்டன் உடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை.. ரகசியமாய் நடந்த நிச்சயதார்த்தம்

ஏலே: ஹலிதா ஷமீம் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு ஏலே திரைப்படம் வெளிவந்தது. இதில் சமுத்திரக்கனி, மணிகண்டன் மற்றும் தீபா சங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சமுத்திரக்கனியின் மகனாக பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடித்திருக்கிறார். இதில் ஒரு மகனாக என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார் என்பதை காட்டப்பட்டு இருக்கும். இப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக ஓடிடி-யில் மற்றும் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சில்லு கருப்பட்டி: ஹலிதா ஷமீம் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு சில்லு கருப்பட்டி திரைப்படம் வெளிவந்தது. இதில் சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், நிவேதிதா சதீஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் வெவ்வேறு வாழ்க்கையில் வாழும் நான்கு மனிதர்களை சுற்றி கதை அமைந்து வரும். இதில் மணிகண்டன் மற்றும் நிவேதிதாக்கு ஆரம்பத்தில் நட்பு உருவாகுது. பிறகு அது காதலாக மாறுகிறது. அடுத்து மணிகண்டனுக்கு ஏற்படும் புற்றுநோய் பிரச்சினையால் ஏற்படும் விஷயத்தை வைத்து கதை நகர்கிறது.

8 தோட்டாக்கள்: ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு 8 தோட்டாக்கள் திரைப்படம் வெளிவந்தது. இதில் வெற்றி, அபர்ணா பாலமுரளி, எம் எஸ் பாஸ்கர், நாசர் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் துப்பாக்கி தொலைந்து போனதால் அவருக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளை வைத்து கதையாக எடுக்கப்பட்டிருக்கும். இதில் மணிகண்டன் ஜெய் கேரட்டில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Also read: ஒரே இரவில் என்ன வேணாலும் நடக்கலாம்.. ஜெய் பீம் மணிகண்டன்-அதர்வா கூட்டணியில் உருவான மத்தகம் டீசர்

Trending News