வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தன்னைவிட அதிக வயதுடைய ஹீரோகளுக்கு 5 படங்களில் அம்மாவாக நடித்த நடிகை.. விஜய், அஜித்துக்கும் இந்த நிலைமைதான்

பொதுவாக சினிமாவில் எந்த மாதிரி அறிமுகம் ஆகிறார்களோ அதே மாதிரி கதாபாத்திரம் தான் முக்கால்வாசி தேடி வரும். அப்படித்தான் ஜானகி சபேஷ் முதன் முதலில் ஐஸ்வர்யாராயின் அம்மாவாக ஜீன்ஸ் படத்தில் நடித்ததில் இருந்து தொடர்ந்து இவருக்கு அம்மா வாய்ப்பு மட்டும் தேடி வருகிறது. அதிலும் இவருடைய வயதுக்கு கம்மியான ஹீரோகளுக்கு அம்மாவாகவும் மற்றும் ஒரே வயதில் இருக்கும் நடிகர்களுக்கு அம்மாவாகவும், மாமியாராகவும் நடித்து வருகிறார். அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.

ரன்: என் லிங்கசாமி இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு ரன் திரைப்படம் வெளிவந்தது. இதில் மாதவன், மீரா ஜாஸ்மின், விவேக், ரகுவரன் மற்றும் ஜானகி சபேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் மாதவனின் வயது 32 ஆக இருக்கும்போது இவருக்கு அம்மா கேரக்டரில் நடித்த ஜானகியின் வயது 28 தான். ஆனாலும் அந்த குறை எங்குமே தெரியாத அளவுக்கு படத்தில் கச்சிதமாக நடித்திருப்பார்.

Also read: கொல மாஸாக வெளிவந்த கங்குவா பட போஸ்டர்.. அடேங்கப்பா! அசந்து போன சூர்யா

பூவெல்லாம் உன் வாசம்: எழில் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு பூவெல்லாம் உன் வாசம் திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், ஜோதிகா, விவேக், கோவை சரளா மற்றும் ஜானகி சபேஷ் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அஜித்துக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். இதில் இவருடைய வயது 27 ஆனால் அஜித்தின் வயது 30. இவரின் வயதை விட கம்மி வயதாக இருந்த ஜானகி சபேஷ் இப்படத்தில் அம்மாவாக அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பர்.

மின்னலே: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு மின்னலே திரைப்படம் வெளிவந்தது. இதில் மாதவன், ரீமாசென், அப்பாஸ், நாகேஷ், விவேக் மற்றும் ஜானகி சபேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ஜானகி சபேஷ் என்பவர் அப்பாஸ்க்கு அம்மாவாக நடித்திருக்கிறார். இதில் நடிக்கும் போது இவருடைய வயது 27. ஆனால் அப்பாஸுக்கும் கிட்டத்தட்ட அதே வயது தான். ஆனாலும் இவருக்கு அம்மாவாக நடித்திருப்பார்.

Also read: இன்று வரை சர்ச்சையில் சிக்காத நடிகை.. அஜித்துடன் ஜோடி சேர்ந்து ஹிட் கொடுத்த ஹீரோயின்

சிங்கம்: ஹரி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு சிங்கம் திரைப்படம் வெளிவந்தது. இதில் சூர்யா, அனுஷ்கா செட்டி, பிரகாஷ்ராஜ், விவேக் மற்றும் ஜானகி சபேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அனுஷ்காவின் அம்மாவாகவும், சூர்யாவின் மாமியாராகவும் இவருடைய கேரக்டர் இருக்கும். அப்பொழுது இவருக்கும் சூர்யாவுக்கும் ஒரே வயது தான். ஆனாலும் மாமியாராகவும் அம்மாவாகவும் இவர் சரியாக பொருந்தக் கூடியவர் என்று சொல்லும் அளவிற்கு நடிப்பால் நம்மளை நம்ப வைத்து இருப்பார்.

கில்லி: தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு கில்லி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் ஜானகி சபேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய்யின் அம்மாவாக ஜானகி சுபாஷ் நடித்திருக்கிறார். இப்படத்தில் இவர் நடிக்கும் போது இவருடைய வயது 30 ஆகவும் விஜய்க்கும் அதே வயதும்தான் இருந்தது. ஆனால் அந்த ஒற்றுமை கொஞ்சம் கூட இல்லாமல் உண்மையிலேயே இவருக்கு அம்மாவாக மூத்த கேரக்டரில் அழகாக நடித்திருப்பார்.

Also read: கோடு போட்டா ரோடே போடும் தளபதி.. அனிருத்தை ஆச்சரியப்பட வைத்த விஜய்

Trending News