வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஓவர் பில்டப், அட்டர் பிளாப்.. 2024-ல் பெரிய ஏமாற்றத்தை கொடுத்த 5 படங்கள்!

Kanguva: ஒரு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னமே அதன் மீது அதிக எதிர்பார்ப்பு கிளம்புவதற்கு ஒன்று படத்தின் ஹீரோ காரணமாக இருக்கும். மற்றொன்று அந்த இயக்குனர் தேர்ந்தெடுத்த கதைக்களமாக இருக்கும்.

எப்போ டா இந்த படம் ரிலீஸ் ஆகும் என காத்து கிடந்து, படத்தை பார்த்த பிறகு ஏன்டா இந்த படத்தை பார்த்தோம் என்று பீல் பண்ண வைக்கும் படங்களும் இருக்கிறது. அப்படி 2024 இல் ஓவர் பில்டப் உடன் வெளிவந்து, அட்டர் பிளாப் ஆன ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

ஓவர் பில்டப், அட்டர் பிளாப்

இந்தியன் 2: இந்தியன் 2 படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு வந்ததற்கு காரணம் கமல் மற்றும் சங்கர் கூட்டணி தான். முதல் பாகம் 90களின் காலகட்டத்தில் பெரிய அளவில் ஹிட்டானது. 20 வருடத்திற்கு பிறகு இரண்டாம் பாகம் என்றால் இதில் என்ன இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்களுக்கு அதிகமாக இருந்தது. ஆனால் இந்த படம் தியேட்டருக்கு வந்தவர்களை எவ்வளவு கதற வைக்க முடியுமோ அவ்வளவு கதற வைத்து அனுப்பியது.

லால் ஸலாம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகிறார் இதுதான் படத்தின் முதல் எதிர்பார்ப்புக்கு காரணம். அதை தாண்டி கிரிக்கெட், ரஜினிகாந்த் ஏற்று நடித்த மொய்தீன் பாய் கேரக்டர் தான் அடுத்த கட்ட எதிர்பார்ப்பு.

ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதை தாண்டி படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா சில புட்டேஜ்கள் தொலைந்து விட்டது என்று ஒரு நொண்டி சாக்கு சொன்னது கொஞ்சம் கடுப்பாக தான் இருந்தது.

கங்குவா: நடிகர் சூர்யா கிட்டதட்ட மூன்று வருடங்கள் தன்னுடைய கடின உழைப்பை போட்ட படம் தான் கங்குவா. வரலாற்று படம், அதிநுட்ப தொழில்நுட்பம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஆனால் ரிலீசுக்கு பிறகு படம் மொத்தமாக சொதப்பிவிட்டது என்பதுதான் ரசிகர்களின் கருத்து.

பிளடி பெக்கர்: லிஃப்ட் மற்றும் டாடா படங்களின் வெற்றியை தொடர்ந்து ப்ளடி பெக்கர் படம் கவின் நடிப்பில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. படத்தின் இண்ட்ரொடக்ஷனில் நெல்சன் மற்றும் கிங்ஸ்லீ கவினை அறிமுகப்படுத்திய விதம் மற்றும் ரிலீசுக்கு முன்பே வெளியான 2,3 காட்சிகள் தான் படத்தின் அதீத எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்தது. ஆனால் ரசிகர்களிடையே இந்த படம் பெரிய வரவேற்பை பெறாமல் போனது.

பிரதர்: சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற காமெடி கலாட்டா படங்களை கொடுத்த எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார் என்றதும் பிரதர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் எகிறியது. ஆனால் ஏனோ ரிலீஸ் க்கு பிறகு ரசிகர்களின் மனதோடு ஒட்டாமல் போய்விட்டது.

Trending News