வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் 5 இசையமைப்பாளர்கள்.. இசையால் அடிமையாக்கிய யுவன்

Music Directors: தமிழ் சினிமாவில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்து நம்மை ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு மெகா ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்கள். அதில் சில மியூசிக் டைரக்டர் மட்டும் தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட இசையமைப்பாளர்களைப் பற்றி பார்க்கலாம்.

ஜிவி பிரகாஷ்: இவர் எந்த அளவுக்கு இசையில் பிரபலமாக இருக்கிறாரோ அதே அளவுக்கு நடிப்பிலும் இவருடையத் திறமையை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். அத்துடன் இவருடைய இசையால் எந்த அளவுக்கு மக்களை என்டர்டைன்மென்ட் படுத்தி சந்தோஷப்படுத்த முடியுமோ அதை எல்லாம் சரியாக செய்து மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார்.

Also read: அனிருத்தை ஓரம்கட்ட வரும் ஜிவி பிரகாஷ்.. அடுத்தடுத்த படவாய்ப்பால் எடுத்த முக்கிய முடிவு

சந்தோஷ் நாராயணன்: இவருடைய மிகப்பெரிய பிளஸ் இவர் கொடுக்கும் பிஜிஎம் தான். இவர் பறையடித்து பாட ஆரம்பித்தால் ஆடாத ஆளே கிடையாது அந்த அளவிற்கு பெஸ்டான பாடலை கொடுக்கக்கூடியவர். சமீபத்தில் அதிக அளவில் ஈர்க்கப்பட்ட இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர்.

அனிருத்: இவர் தன்னுடைய இசையால் தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிக விரைவில் வளர்ந்து வந்திருக்கிறார். இவருடைய எனர்ஜியான பாடல்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அத்துடன் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களின் வாய்ப்பு எல்லாம் இவரைத் தேடித்தான் போய்க் கொண்டிருக்கிறது.

Also read: கோடு போட்டா ரோடே போடும் தளபதி.. அனிருத்தை ஆச்சரியப்பட வைத்த விஜய்

ஏஆர் ரகுமான்: எப்பொழுதுமே இவருடைய இசைக்குத் தான் முதலிடம் என்று சொல்வதற்கு ஏற்ப இவருடைய பாடல்கள் அனைத்தும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். இவருடைய இசை பாடலுக்கு மட்டும் பெருமை சேர்த்ததாக இல்லாமல் தமிழ் மொழிப் பெருமையை உலகத்தில் உள்ள எல்லா மூலைக்கும் கொண்டு போய் சேர்க்கக் கூடிய நாயகனாகவும் இருந்திருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா: இவருடைய இசைக்கு அனைவரும் அடிமை என்று சொல்வதை விட போதையாக இருக்கிறோம் என்று சொன்னால் சரியாக இருக்கும். அதிலும் தற்போது லவ் டுடே படத்தின் மூலம் மறுபடியும் கம்பேக் கொடுத்து அனைவரையும் கவர்ந்து விட்டார். அத்துடன் இவரைத் தேடி தொடர்ந்து வரும் பட வாய்ப்புகள் மூலம் இன்னும் அதிக அளவில் ட்ரெண்டிங்கில் வருவார் என்பது எந்த வித சந்தேகமும் இல்லை. தற்போது விஜய்யின் தளபதி 68 படத்தில் கமிட் ஆகி இன்னும் ரசிகர்களை ஆரவாரப்படுத்தி உள்ளார்.

Also read: கடவுள் பாட்டை காதல் பாட்டாக மாற்றிய 5 இசையமைப்பாளர்கள்.. ஆத்தா பாட்டை காப்பியடித்த யுவன் சங்கர் ராஜா

Trending News