வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 21, 2025

மன அழுத்தத்தில் இருக்கீங்களா?. டைம் இருக்கும் போது இந்த 5 படத்தை மிஸ் பண்ணாம பார்த்துடுங்க

Movies: மன அழுத்தம், வேலை பளுவில் இருப்பவர்களுக்கு நேரம் கிடைக்கும்போது எப்படி இந்த அழுத்தங்களில் இருந்து வெளிவருவது என யோசனையாக இருக்கும்.

அப்படிப்பட்டவர்கள் ஒரு இரண்டரை மணி நேரம் தன்னை மறந்து, மனசு லேசான உணர்வை பெற இந்த ஐந்து படங்களை மிஸ் பண்ணாமல் பார்த்து விடுங்கள்.

5 படத்தை மிஸ் பண்ணாம பார்த்துடுங்க

பண்ணையாரும் பத்மினியும்: இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் தான் பண்ணையாரும் பத்மினியும்.

வயது கடந்த பிறகும் கணவன் மனைவிக்குள்ளே இருக்கும் அதீத பாசத்தை மண்வாசனையும் சேர்த்து கொடுத்திருக்கும் இந்த படம்.

திருச்சிற்றம்பலம்: சில வருடங்களாக தமிழ் சினிமாவில் வன்முறை இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம்.

இப்படிப்பட்ட காலகட்டத்தில் அழகான காதலை கண்முன்னே காட்டிய படம் தான் திருச்சிற்றம்பலம்.

96: இந்தப் படத்தை பார்த்து முடிப்பவர்களுக்கு மனதில் கனமான உணர்வு ஏற்படத்தான் செய்யும். இருந்தாலும் இளமைக்கால நினைவுகளை அசைப்போட நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த படம்.

மேயாத மான்: எளிமையான மக்களின் எதார்த்தமான வாழ்க்கையை கண் முன்னாடி நிறுத்திய படம் மேயாத மான்.

வைபவ் மற்றும் அவருடைய நண்பருக்கு இடையே இருக்கும் நட்பு, பிரியா பவானி சங்கர் உடனான காதல் என இது ஒரு அழகான உணர்வை கொடுக்கும் படம்.

லப்பர் பந்து: சமீபத்தில் ரிலீசான படங்களில் தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது லப்பர் பந்து திரைப்படத்தை தான்.

தினேஷ் மற்றும் அவருடைய மனைவிக்கு இடையேயான புரிதல். ஹரிஷ் கல்யாண் மற்றும் அவருடைய காதலிக்கு இடையே இருக்கும் நம்பகத்தன்மையான காதல்.

இரண்டு தலைமுறைக்கு இடையே நடக்குமா ஈகோ என படம் நல்ல ஒரு கதைக்களம்.

Trending News