ஜுனியர் மார்க்கண்டேயன் ராம்கியின் நடிப்பில் பார்க்க வேண்டிய 5 படங்கள்.. காசுக்காக கணவனையே வித்த ‘இரட்டை ரோஜா’

Ramki: எவ்வளவு வயதானாலும் இளமையுடன் இருப்பவர்களை தான் மார்க்கண்டேயன் என்று சொல்வார்கள். தமிழ் சினிமாவின் இதற்கு முன் அந்த பெயரை வாங்கியவர் நடிகர் சிவகுமார்.

தற்போது அந்தப் பெயருக்கு அர்த்தம் நடிகர் ராம்கி இருக்கிறார். 62 வயதிலும் 30 வயது இளைஞன் போல் தோற்றம் அவருக்கு இருக்கிறது.

ராம்கி ஹீரோவாக கலக்கிய இந்த ஐந்து படங்களை கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பார்த்து விடுங்கள்.

ராம்கியின் நடிப்பில் பார்க்க வேண்டிய 5 படங்கள்

செந்தூர பூவே: 1988 ஆம் ஆண்டு வெளியான செந்தூரப்பூவே படத்தின் மூலம் தான் ராம்கிக்கு பெண் ரசிகைகள் அதிகமானார்கள்.

விஜயகாந்த் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இந்த படம் அந்த காலத்திலேயே ரெண்டரை கோடி வசூலித்தது. மேலும் ராம்கி- நிரோஷா ஜோடி பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

மருது பாண்டி: ஹீரோக்கள் ஊர்க்காவலன் கேரக்டரில் நடிக்கும் படங்கள் ஒரு காலகட்டத்தில் அதிகமாக ரிலீஸ் ஆகியது.

அப்படி ஒரு கதை களத்தில் ராம்கி ஜெயித்த படம் தான் மருது பாண்டி. இந்த படத்தில் அவருக்கு நிரோஷா மற்றும் சீதா ஜோடியாக நடித்திருப்பார்கள்.

இரட்டை ரோஜா: இரட்டை ரோஜா படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு எந்த நடிகருக்குமே ஒரு துணிச்சல் வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்.

குஷ்பூ மற்றும் ஊர்வசியை படத்தின் ஹீரோ என்று கூட சொல்லலாம். இவர்களது அசாத்திய நடிப்பிற்கு இடையே ராம்கி தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

மாயா பஜார்: ராம்கி மற்றும் ஊர்வசியின் அடிப்படையில் வெளியான ஃபேண்டஸி திரைப்படம் தான் மாயாபஜார். இந்த படத்தில் ராம்கி ஹீரோ மற்றும் வில்லன் என்ற இரண்டு கேரக்டரிலுமே நடித்து அசத்தியிருப்பார்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி: விஸ்வநாதன் ராமமூர்த்தி படம் நல்ல ஒரு பீல் குட் மூவி. இந்த படத்தில் விவேக் மற்றும் கோவை சரளாவுக்கு இணையாக காமெடியில் கலக்கி இருப்பார் ராம்கி. நான் பெற்ற மகனே படத்திற்குப் பிறகு ராம்கி மற்றும் விவேக் கெமிஸ்ட்ரியில் இந்த படம் பட்டையை கிளப்பியது.

Leave a Comment