வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மலையாள சினிமாவை புரட்டி போட்ட 5 சஸ்பென்ஸ் திரில்லர் படங்கள்.. தயவுசெய்து மிஸ் பண்ணாம பாருங்க!

5 Best Malayalam thriller movies: சஸ்பென்ஸ் திரில்லர் படத்துக்கு எப்பொழுதுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும். பழைய ஜெமினிகணேசனின் சாந்தி நிலையத்தில் ஆரம்பித்து இன்று போர் தொழில் படம் வரை மாஸ் ஹிட் கொடுத்து ரசிகர்களை கவர்ந்த படங்கள் நிறைய உண்டு. அப்படி மலையாளத்தில் பார்க்க வேண்டிய 5 படங்கள்.

நம்ம டப்பிங்கில் தயவுசெய்து பாத்துருங்க

புருஷ பிரேதம்: இரண்டு மணி நேரம் தான் படம். வயிறு குலுங்க குலுக்க சிரிக்க வைக்கும் சஸ்பென்ஸ் திரில்லர். காமெடி பீஸாக இருக்கும் ஒரு போலீஸ்காரர் கணக்கு எல்லாம் தெரிந்தது போல் ஓவர் பில்டப் கொடுப்பார். தொடர்ந்து ஏழு நாட்கள் உரிமை கோராத பிணங்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும். அப்படி ஒப்படைக்கப்பட்டு எரித்த பிணம் ஒன்றை உரிமை கொண்டாடி ஒரு பெண் வருவது தான் கதை.

பூதக்காலம்: படத்தில் ஐந்து, ஆறு கதாபாத்திரங்கள் தான். பக்கவாதத்தில் படுத்திருக்கும் ஒரு பெண். ஆஷா என்னும் கதாபாத்திரத்தில் தமிழ் நடிகை நம் நடிப்பு ராட்சசி ரேவதி. இந்த படத்தை பார்ப்பதற்கு பொறுமையும் ரொம்ப அவசியம். திடீரென ஆசாவின் தாய் இறந்தவுடன் நடக்கும் திகில் சம்பவம்தான் படம்.

திங்களாழ்ச்ச நிச்சயம்: கேளர மாநிலம் மலபார் பகுதியில் நடக்கும் ஒரு அமானுஷ்ய கதையை கண்முன் காட்டுவது தான் இந்த படம். கல்யாணத்தில் விருப்பம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடிப் போகும் ஒரு பெண் சந்திக்கும் திகில் அனுபவம் தான் இந்த படம்.

சுருளி: அறிவியல் மற்றும் திகில் கலந்த கதையைப் பார்க்க வேண்டும் என்றால் இந்த படம் தான் சரியான சாய்ஸ். ஜெயிலிலிருந்து தப்பி ஓடிய குற்றவாளியை கண்டுபிடிக்க இரண்டு போலீஸ்காரர்கள் சுருளி என்றும் கிராமத்துக்கு வருகிறார்கள்,அங்கே அவர்கள் சந்திக்கும் அமானுஷ்யம் மற்றும் எலியின் போன்ற உணர்வுகள் தான் இந்த படத்தின் கதை.

அந்தாக்சரி: காவல் நிலையத்துக்கு பிரச்சனை என்று வரும் மக்களை அந்தாக்சரி விளையாடச் சொல்லியே வழக்கை தீர்த்து வைக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் பற்றிய கதை. மர்ம நபரிடமிருந்து மக்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது, அதில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வதுதான் கதை

Trending News