வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த 5 ஜோடிகள்.. நிஜத்திலும் ஒன்று சேர்ந்த சூர்யா-ஜோதிகா

எத்தனையோ நடிகர் நடிகைகள் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் வந்திருக்கிறார்கள். அவர்களின் சில பேர் வெற்றிகளையும் பார்த்திருக்கிறார்கள் தோல்வியும் சந்தித்து இருக்கிறார்கள். அதிலும் சில பேர் ஜோடியாகவே அறிமுகமாகி நடித்த முதல் படத்திலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி ரசிகர்களிடமிருந்து பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஜோடிகளை பற்றி பார்க்கலாம்.

ஜெயம் ரவி சதா: இயக்குனர் தேஜா இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு ஜெயம் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜெயம் ரவி, சதா இருவருக்குமே கிடைத்த முதல் படம். இவர்களுடைய முதல் படத்திலேயே நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்று பல ரசிகர்களின் மனதில் இப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது என்று சொல்லலாம். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய ஆச்சரியமான வெற்றியை பெற்றது.

Also read: 100 நாட்களை தாண்டிய ஜெயம் ரவியின் 6 படங்கள்.. பல ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்த மனுஷன்

சூர்யா ஜோதிகா: இயக்குனர் வசந்த் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் மூலம் ஜோதிகா ஹீரோயின் ஆக அறிமுகமானார். அதே மாதிரி சூர்யா இந்த படத்திற்கு முன்னதாக இரண்டு, மூன்று படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் தான் இவருக்கு ஹீரோவாக ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது. இவர்கள் நடித்த இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் மூலம் அவருடைய காதல் மலர்ந்ததால் நிஜத்திலும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.

பிரசன்னா கனிகா: இயக்குனர் சுகி கணேசன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு பைவ் ஸ்டார் திரைப்படம் வெளிவந்தது. இதில் பிரசன்னா கனிகா இருவருமே நடித்த முதல் படம். நடித்த முதல் படத்திலேயே வெற்றி பெற்று விட்டார்கள். இப்படம் சரியான பொழுது போக்கு படமாகவும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய படமாகவும் பாராட்டுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: திருமணத்திற்கு பின்னும் பிஸியாகி சுற்றி வரும் ஜோதிகா.. அக்கட தேசத்தில் அடித்த ஜாக்பாட்

பரத் சந்தியா: பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு காதல் திரைப்படம் வெளிவந்தது. இதில் பரத், சந்தியா, சுகுமார் மற்றும் தண்டபாணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் தான் ஹீரோ ஹீரோயின் ஆக பரத் சந்தியா அறிமுகமாகி நடித்த முதல் படம். முதல் படத்திலேயே இவருடைய எதார்த்தமான நடிப்பை கொடுத்து பல பேர் மனதில் இடம் பிடித்து விட்டார்கள். அத்துடன் இவர்களுடைய நடிப்புக்கு பல பாராட்டுக்கள் குவிந்தது. மேலும் கம்மி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் படமாக வெற்றி பெற்றது.

தனுஷ் ஷெரின்: கஸ்தூரிராஜா இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை திரைப்படம் வெளிவந்தது. இதில் தனுஷ் ஷெரின் மற்றும் பலர் புது முகங்களாக நடித்திருக்கிறார்கள். ஆனால் இதில் தனுஷ் மற்றும் ஷெரின் மட்டும் மிகப் பிரபலமாகி வந்தார்கள். இவர்கள் நடித்த முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார்கள். தற்போது தனுஷ் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துவிட்டார்.

Also read: சிவகார்த்திகேயன், தனுஷை பதம் பார்க்க தீபாவளிக்கு களமிறங்கும் விரல் நடிகர்.. பக்கபலமாக நிற்கும் கமல்

Trending News