திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஒரே குடும்பத்துல சினிமாலையும், சீரியலிலும் நடிக்கும் 5 பேர்.. வேறு வழி இல்லாமல் மயில்சாமி மகன் எடுத்த முடிவு

Tamil Movie Celebrity: திறமையை ஏதாவது ஒரு வகையில் நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுள் ஒருத்தர் சினிமாவிலும் இன்னொருத்தர் சீரியலிலும் நடித்திருக்கின்றனர். அப்படி ஐந்து சினிமா பிரபலங்களின் குடும்பத்தினர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கின்றனர், அவர்களைப் பற்றி பார்ப்போம்.

பாபி சிம்ஹா: ஹீரோவாகவும் வில்லனாகவும் தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் நடிகர் பாபி சிம்ஹாவின் அக்கா ரேஷ்மா பசுபுலேட்டி, விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கேரக்டரில் பாக்யாவின் சக்களத்தியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல ஜீ தமிழிலும் சீதாராமன் சீரியலில் வில்லியாக மிரட்டிக் கொண்டிருக்கிறார். இதில் மட்டுமல்ல வம்சம், வாணி ராணி, ஆண்டாள் அழகன், மரகத வீணை போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

அதோட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரேஷ்மா தனது குடும்ப வாழ்க்கையை பற்றியும் குழந்தைகளை பற்றியும் பேசினார். இவர் சின்னத்திரையில் மட்டுமல்ல வெள்ளித்திரையில் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற படத்தில் புஷ்பா என்ற கேரக்டரை யாராலும் மறக்க முடியாது. அந்த கதாபாத்திரத்தில் தான் ரேஷ்மா நடித்தார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: எந்த கேரக்டர் கொடுத்தாலும் பிச்சு உதறக்கூடிய நடிகை தான் டஸ்கி பியூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் இவருடைய உடன் பிறந்த சகோதரர் மணிகண்டன் அவருடைய மனைவியுடன் விஜய் டிவியில் Mr & Mrs சின்னத்திரை என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் வள்ளி, கேளடி கண்மணி, அழகு மற்றும் விஜய் டிவியில் சிவா மனசுல சக்தி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.

இனியா: கதாநாயகியாக அறிமுகமான ‘வாகை சூடவா’ என்ற முதல் படத்திலேயே தேசிய விருதை தட்டி தூக்கியவர் தான் நடிகை இனியா. இவருக்கு சுவாதி தாரா என்ற சகோதரியும் இருக்கிறார். இவரும் ஒரு நடிகை தான். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகிய லஷ்மி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் உமா என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

Also Read: மயில்சாமி மரணமடைந்து பாதியிலே விட்டுட்டு போன 5 படங்கள்.. பேரிழப்பை சந்தித்த சந்தானத்தின் 80ஸ் பில்டப்

லிவிங்ஸ்டன்: 90களில் நடிகராகவும் இயக்குனராகவும் கலக்கிக் கொண்டிருந்த லிவிங்ஸ்டனுக்கு இரண்டு மகள்கள். அதில் ஜோவிடா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மயில்சாமி: காமெடி கேரக்டரிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து புகழ்பெற்ற மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி சினிமாவில் ஹீரோவாக எவ்வளவோ முயற்சித்தார். ஆனால் அது சரியாக அமையாததால் இப்போது விஜய் டிவியில் ‘தங்கமகள்’ சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது வெள்ளித்திரையை விட சின்னத்திரையின் மூலமாக அதிகமான ரசிகர்களை கவர்ந்து விடலாம்.

அந்த வரிசையில் யுவன் மயில்சாமி ஆரம்பமே சின்னத்திரையில் அமர்க்களமாக தொடங்கி இருக்கிறார். அதுவும் விஜய் டிவி என்பதால் இளம் ரசிகர்கள் இவருக்கு அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். தன்னுடைய அப்பாவின் கனவு லட்சியத்தை யுவன் மயில்சாமி நிறைவேற்ற வேண்டும் என்ற அவருடைய முயற்சிக்கு படிப்படியாக பலம் கிடைக்கிறது.

Also Read: விவேக்கை பாடாய்படுத்தி லூட்டி அடித்த மயில்சாமியின் 5 படங்கள்.. வள்ளல் என புகழ்ந்து பேசிய விவேக்

Trending News