வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கெஸ்ட் ரோலில் பல கோடிகள் சம்பளம் வாங்கிய 5 பேர்.. கரும்பு தின்ன கூலி வாங்கிய விஜய் சேதுபதி

Guest Role Actors Salary: தற்போது சினிமாவில் டாப் நடிகர்கள் மற்றொரு நடிகர்களின் படங்களில் கெஸ்ட் ரோலில் நடிப்பது ட்ரண்ட் ஆகிவிட்டது. அப்படி படங்களில் சில நிமிடங்கள் மட்டுமே வருவதற்கு பல கோடிகளை சம்பளமாக வாங்குகின்றனர். அதிலும் குறிப்பிட்டு சொல்லக் கூடிய இந்த 5 பிரபலங்கள் சிறப்பு தோற்றத்திற்கு மட்டும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி இருக்கின்றனர். அதிலும் விஜய் சேதுபதி கரும்பு தின்ன கூலி கேட்டிருக்கிறார்.

சிம்பு: கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ‘இன்று போய் நாளை வா’ படத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற நகைச்சுவை படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கலகலப்பான காதல் நகைச்சுவை திரைப்படம் ஆன இந்த படத்தில் சந்தானம், சேது, சீனிவாசன் மூவரும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்தனர். இதில் ஒரு சில நிமிடம் மட்டுமே சிம்பு கெஸ்ட் ரோலில் வந்திருந்தார். இதற்காக அவருக்கு 1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது.

சமந்தா: தென்னிந்திய நடிகையாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் சமந்தா, புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ என்ற ஐட்டம் பாடலில் கவர்ச்சியாக ஆட்டம் போட்டு இளசுகளை திணறடித்தார். இந்த ஒரே ஒரு பாடலுக்காக சமந்தாவிற்கு 2 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது.

Also Read: தக்காளியை போல் சந்தானத்திற்கு வந்த வாழ்வு.. ஒரு படம் ஓடினா இப்படியா சம்பளத்தை கூட்டுறது

விஜய் சேதுபதி: நயன்தாராவின் காதல் கணவராக இமைக்கா நொடிகள் படத்தில் விஜய் சேதுபதி நடித்தார். சில நிமிடங்கள் மட்டுமே விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்திருந்தாலும் நயன்தாராவுடன் ஜோடி போட்டது சூப்பராகவே இருந்தது. கரும்பு தின்ன கூலி கேட்பது போல் விஜய் சேதுபதி இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் உடன் டூயட் பாடியதற்கு 3 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார்.

அஜித்: 80களில் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த ஸ்ரீதேவி திருமணத்திற்கு பிறகு அவ்வளவாகவே படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தில் நடித்தார். இதில் தல அஜித், ஸ்ரீதேவி மீது இருந்த மரியாதையின் நிமித்தமாக கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்காக அவர் 5 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.

Also Read: விஜய் சேதுபதி போல், அக்கட தேசத்திற்கு தஞ்சம் புகுந்த நடிகர்.. 100 கோடி கலெக்ஷன் பார்த்த படம்

தீபிகா படுகோனே: ஹாலிவுட் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருக்கும் தீபிகா படுகோனே, அட்லி இயக்கும் ஜவான் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஷாருக்கான் அப்பா, மகன் என்ற இரண்டு வேடத்தில் நடித்துள்ளார். இதில்அப்பாவாக நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் பிளாஷ்பேக் காட்சியில் வருகிறார். படத்தில் இந்த கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமாம். இதனால் சில நிமிடம் மட்டுமே திரையில் தோன்றுவதற்கு தீபிகா படுகோனே 5 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார்.

சூர்யா: தமிழ் சினிமாவின் நடிப்பு அரக்கனாக ரசிகர்கள் பார்க்கக்கூடிய சூர்யா, விக்ரம் படத்தில் நடித்த ரோலக்ஸ் கேரக்டர் பலரையும் மிரள வைத்தது. இவர் சில நிமிடம் மட்டுமே ரோலக்ஸ் ஆக விக்ரம் படத்தில் வந்திருந்தாலும் அந்த காட்சியை இன்றுவரை யாராலும் மறக்கவே முடியாது. அந்த அளவிற்கு ஆழமாக மனதில் பதிந்தார். உலக நாயகன் கமலஹாசனை சூர்யா அண்ணன் மாதிரி நினைப்பதால் இந்த படத்திற்கு பத்து பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார்.

Also Read: காதலுக்காக மதம் மாறிய 6 நடிகைகள்.. விக்கியின் காதலுக்காக மதம் மாறிய நயன்தாரா

Trending News