திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

எனக்கா மார்க்கெட் இல்ல, 5 படங்களில் கமிட்டாகியுள்ள நயன்.. பொண்டாட்டியை வைத்து கல்லா கட்டும் விக்கி

Nayanthara Lineup Movies: நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பிறகு பெரிய அளவில் படங்கள் எதுவும் போகவில்லை என்ற ஒரு பேச்சு இருந்து வருகிறது. அதுவும் பாலிவுட்டில் அவர் நடித்த ஜவான் படம் மட்டும் தான் பெரிய அளவில் பேசப்பட்டது. இப்போது தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் த்ரிஷா தான் பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி வருகிறார்.

ஆகையால் நயன்தாராவுக்கு மார்க்கெட் இல்லை என்ற ஒரு பேச்சு போய்க் கொண்டிருந்தது. ஆனால் அதை எல்லாம் உடைத்தெரியும் படி இப்போது ஐந்து படங்களில் நயன்தாரா கமிட் ஆகி இருக்கிறார். அந்த வகையில் ஷங்கரின் உதவியாளரான நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாராவின் 75ஆவது படம் உருவாகி வருகிறது.

இந்த படத்திற்கு அன்னபூரணி என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் யூடியூப்பர் விக்கி இயக்கத்தில் யோகி பாபு உடன் ஒரு படத்தில் நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே யோகி பாபு, நயன்தாரா காம்போவில் வெளியான கோலமாவு கோகிலா படம் படு பயங்கரமான வெற்றியை பெற்றது.

Also Read : ஜெய் லைன் அப்பில் இருக்கும் 5 படங்கள்.. இதற்கெல்லாம் காரணம் புண்ணியவதி நயன்தாரா தான்

மேலும் மாதவன், சித்தார்த் கூட்டணியில் உருவாகி வரும் டெஸ்ட் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ஒரு படத்திலும் நயன்தாரா நடிக்கிறார். இவ்வாறு நயன்தாராவுக்கு படங்கள் வரிசை கட்டி நிற்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன் தயாரிப்பிலும் நயன்தாரா ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறாராம். 20 வருடங்களிலேயே நயன்தாரா கிட்டத்தட்ட 75 படங்களில் நடித்துள்ள நிலையில் இப்போது மேலும் ஐந்து படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

Also Read : புருஷனை உப்புக்கு சப்பாணியாக பயன்படுத்தும் நயன்தாரா.. தலையாட்டி பொம்மையாக இருக்கும் விக்கி

- Advertisement -

Trending News