செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

முன்னாள் காதலியை காட்டி கதி கலங்க வைத்த 5 படங்கள்.. சிம்புவை பாடாய்படுத்திய ரீமாசென்

Simbu-Reema Sen: ஒரு ஹீரோயினை காதலித்து விட்டு சந்தர்ப்ப சூழ்நிலையால் இன்னொரு ஹீரோயினை திருமணம் செய்வது போன்ற பல படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருக்கிறது. ஆனால் முன்னாள் காதலியை திடீரென காட்டி ஹீரோக்களை கதி கலங்க செய்த சில படங்களும் இருக்கிறது. அந்தப் படங்கள் என்ன என்பதை பற்றி இங்கு காண்போம்.

சில்லுனு ஒரு காதல்: சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. இதில் சூர்யா கல்லூரி காலத்தில் பூமிகாவை காதலித்து திருமணம் செய்து கொள்வார். ஆனால் வில்லன் கோஷ்டியால் இந்த காதல் பிரிக்கப்படும். அதன் பிறகு ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு அப்பாவாக இருக்கும் சூர்யாவை பார்க்க முன்னாள் காதலி வருவார்.. இந்த காட்சி சூர்யாவை மட்டும் அல்லாமல் படம் பார்ப்பவர்களையே ஒரு நிமிடம் ஜெர்க்காக வைத்தது.

Also read: காமெடி கிங்காக கலக்கிய கவுண்டமணியின் 5 படங்கள்.. ஹீரோக்களை விட அதிக சம்பளம் வாங்கிய ஒரே மனுஷன்

உன்னை நினைத்து: விக்ரமன் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் சூர்யா, சினேகா, லைலா ஆகியோர் நடித்திருப்பார்கள். அதில் சூர்யா, லைலாவை விரும்புவார். ஆனால் லைலா தன் அப்பா பேச்சை கேட்டு பணக்கார மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள செல்வார்.

அதைத்தொடர்ந்து சூர்யா, சினேகா இருவருக்கும் அழகான ஒரு உறவு செல்லும் நிலையில் திடீர் என்ட்ரி கொடுப்பார் லைலா. அதன் பிறகு ஹீரோ இறுதியில் யாருடன் இணைவார் என்று பதட்டப்பட வைக்கும் அளவுக்கு இந்த கதை இருக்கும்.

அழகி: கடந்த 2002 ஆம் ஆண்டு தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி ஆகியோர் நடித்திருப்பார்கள். பார்த்திபன், தேவயானியை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் போது முன்னாள் காதலியான நந்திதா தாஸ் அவர் வாழ்க்கையில் வருவார். அதை தொடர்ந்து தேவயானிக்கு வரும் சந்தேகமும், குழப்பமும் படத்தை வேறு கோணத்தில் எடுத்துச் செல்லும். இருவருக்கும் நடுவில் சிக்கித் தவிப்பது போல் பார்த்திபனின் கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கும்.

Also read: விவேக், வடிவேலுவின் இடத்தை நிரப்பிய பிரம்மானந்தம்.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த 5 படங்கள்

காலா: பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் ரஜினி, ஈஸ்வரி ராவ், ஹீமா குரேஷி ஆகியோர் நடித்திருப்பார்கள். அதில் ரஜினி ஈஸ்வரி ராவை திருமணம் செய்து கொண்டு பேரன் பேத்தி என்று வாழ்ந்து வருவார். அப்போது முன்னாள் காதலி திரும்பி வருவார். இப்படியாக செல்லும் கதையில் ரஜினியின் இயல்பான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.

வல்லவன்: சிம்பு இயக்கி, நடித்த இப்படத்தில் ரீமாசென், நயன்தாரா ஆகியோர் நடித்திருப்பார்கள். இதில் ஸ்கூல் படிக்கும்போது ரீமாசென்னை காதலிக்கும் சிம்பு பின்னர் அவரை பிரிந்து விடுவார். அதன் பிறகு நயன்தாராவுடன் அவர் காதலில் இருக்கும் போது திடீரென என்ட்ரி கொடுக்கும் ரீமா சென் பயங்கர வில்லத்தனம் செய்வார். சிம்புவை படாத பாடு படுத்தும் இவர் இறுதி வரை வில்லியாகவே இருப்பார்.

இப்படி இந்த ஐந்து படங்களிலும் முன்னாள் காதலியின் வரவு ஹீரோக்களை கதி கலங்க வைத்திருக்கும்.

Also read: நல்ல நடிப்பு திறமை இருந்தும் வெற்றிக்காக போராடும் 2 ஹீரோக்கள்.. விஷாலுக்கு டஃப் கொடுக்கும் நடிகர்

Trending News