புதன்கிழமை, ஜனவரி 8, 2025

மாயாஜாலத்தை வைத்து வித்தை காட்டி 5 படங்கள்.. லாஜிக் இல்லாமல் வந்த புலி

5 Fantasy Movies: மக்களுக்கு ஏற்றவாறு படத்தில் சுவாரஸ்யமும், சஸ்பென்சும் இருந்தால் அப்படம் வெற்றி பெற்று விடும். அது போன்ற படங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு உண்டு.

அவ்வாறு படத்தில் நிஜத்திற்கு மாறாக கற்பனைக்கு உயிர் கொடுக்கும் விதமாய் கதை அமைக்கப்பட்டிருக்கும். அவை காண்போர் இடையே சுவாரிசத்தையும், திகிலையும் ஏற்படுத்தும். இதுபோன்று கற்பனை நிறைந்த கதை அம்சம் கொண்ட 5 படங்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read: அரச்ச மாவையே அரைத்த 5 இயக்குனர்கள்.. சென்டிமென்டில் உருட்டிய சிறுத்தை சிவா

காஷ்மோரா: 2016ல் கோகுல் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் காஷ்மோரா. இப்படத்தில் நயன்தாரா, ஸ்ரீ திவ்யா, கார்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் பிளாக் மேஜிக் மற்றும் பேய்களை கட்டுக்குள் வைப்போம் என கட்டுக்கதை விடும் கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருப்பார். மேலும் அதன் பின் கார்த்திக்குள் புகுந்து கொள்ளும் ராஜ் நாயக் என்னும் கெட்ட ஆவியை நல்ல சக்தியான ரத்ன மகாதேவி ஆன நயன்தாரா அழிக்கும் விதமாய் கதை கொண்டு செல்லப்பட்டிருக்கும். மேலும் இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

டெடி: 2021ல் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் டெடி. இப்படத்தில் ஆர்யா, சாயிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள். இப்படத்தில் சில போதை கும்பலால் கடத்தப்படும் சாயிஷாவின் ஆத்மா டெடி பியர் பொம்மைக்குள் புகுந்து கொண்டு தன்னை காப்பாற்றுமாறு ஆர்யாவிடம் சொல்வது போன்று கதை அமைக்கப்பட்டு இருக்கும். இதுபோன்று உணர்ச்சி பரிமாறும் விதமாய் அமைந்த படங்கள் மக்களிடையே ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்தியிருக்கும்.

Also Read: இதெல்லாம் தேவையில்லாத ஆணி தான்.. கேப்டன் மில்லர் படத்தை விமர்சித்த பிரபலம்

புலி: விஜய் நடிப்பில் ஃபேண்டஸி படமாய் வெளிவந்த இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். பழங்குடியினராய் வேதாளத்தின் மீது கொண்ட நம்பிக்கையின் வாயிலாக நிகழ்த்தும் அற்புதங்களை கதையாக காட்டப்பட்டிருக்கும். இப்படம் சிறுவர்கள் விரும்பும் படமாக அமைந்தது. இருப்பினும் போதிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால், ஓரளவு வசூலை பெற்றது.

மை டியர் பூதம்: 2022ல் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த ஃபேண்டஸி, காமெடி கலந்த படம் தான் மை டியர் பூதம். அஸ்வந்த் என்னும் சிறுவனின் வேண்டுதலுக்கு இணங்க ஜீனியாய் பிரபுதேவா இடம்பெற்று அச்சிறுவனின் ஆசைகளை பூர்த்தி செய்திருப்பார். இப்படம் திரையில் வெளிவந்து மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. இப்படத்தில் பிரபுதேவாவின் நடிப்பு கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.

Also Read: நடிக்கிற படத்தில் முதல் அக்ரீமெண்ட்டே இதுதானா.? மாவீரன் பட பூஜையிலேயே பிட்டு போட்ட அதிதி சங்கர்

அனபெல்லா சேதுபதி: திகில் ஊட்டும் காமெடி கலந்த படமாய் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அனபெல்லா சேதுபதி. இப்படத்தில் டாப்ஸி, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். வீர சேதுபதியால் கட்டப்பட்ட அரண்மனைக்குள் வாழ்ந்த மன்னர்குடும்பத்தினர்கள் ஆழியாய் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். அது தெரியாது அரண்மனையில் கொள்ளையடிக்கும் கும்பல் இடம் பெற்று, ஆவிகளிடம் சிக்கிக் கொள்ளும் விதமாய் கதை அமைக்கப்பட்டிருக்கும். இப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்று தந்தது.

Trending News