திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சினிமாவில் ரொம்ப லேட்டா ஜெயித்த 5 காமெடி நடிகர்கள்.. வடிவேலு ரெட் கார்டுக்கு பின் வளர்ந்த சுவாமிநாதன்

MS Bhaskar: சினிமாவை பொறுத்த வரைக்கும் வெற்றி என்பது எல்லோருக்கும் அவ்வளவு சீக்கிரம் கிடைத்து விடாது. அதேபோன்று பல வருடங்களாக போராடினாலும் அவர்களுக்கான நேரம் வரும் பொழுது தான் எல்லாமே சரியாக அமைந்து வெற்றியின் பாதையில் பயணிக்க ஆரம்பிப்பார்கள். இந்த ஐந்து காமெடி நடிகர்கள் பல வருடங்களாக சினிமாவில் இருந்திருந்தாலும் தங்கள் இளமை காலங்கள் எல்லாம் முடிந்த பிறகு தான் வெற்றி என்பதை பார்த்து இருக்கிறார்கள்.

சுவாமிநாதன்: நடிகர் சுவாமிநாதன் 1985 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி தான் இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தியது. பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் இவருடைய கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. நடிகர் வடிவேலுக்கு ரெட் கார்ட் கொடுத்து அவர் நடிக்காமால் இருந்த நேரத்தில் சுவாமி நாதனுக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன.

Also Read:முழுக்க முழுக்க காமெடியில் வெளிவந்த ரஜினியின் 6 படங்கள்.. வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் எஸ்கேப் ஆன தலைவர்

எம்எஸ் பாஸ்கர்: 1987 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் சினிமாவில் இருப்பவர் தான் நடிகர் எம் எஸ் பாஸ்கர். காமெடியனாக மட்டுமில்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட், குணச்சித்திர கதாபாத்திரம் என பன்முக திறமை கொண்டவர் இவர். எங்கள் அண்ணா திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் வந்திருந்தாலும் அந்த படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. இன்று தமிழ் சினிமா ரசிகர்களால் அதிக வரவேற்பு பெற்று வருகிறார் பாஸ்கர்.

தம்பி ராமையா : 1999 ஆம் ஆண்டு வெளியான மலபார் போலீஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தம்பி ராமையா. இவர் வடிவேலுவை வைத்து நா. அழகப்பன் படத்தை இயக்கினார் . பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படம் நடிகர் தம்பிராமையாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்திற்காக தேசிய விருதும் வாங்கினார்.

Also Read:சிக்ஸ் பேக் வைத்து பிரயோஜனம் இல்லாத 5 நடிகர்கள்.. தொடர் தோல்விகளை கொடுத்து வரும் காதல் பரத்

முனீஸ் காந்த்: கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற மிகப்பெரிய ஆசையுடன் இருந்தவர் நடிகர் முனீஸ் காந்த் . எந்த வாய்ப்புகளும் கிடைக்காமல் குறும்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இவருக்கு முண்டாசுப்பட்டி திரைப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ராமதாஸ் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர் இந்த படத்திற்கு பிறகு தன்னுடைய பெயரை முனீஸ் காந்த் என்று மாற்றிக் கொண்டார். இப்போது முன்னணி காமெடி ஹீரோவாக இருக்கிறார்.

மயில்சாமி: 1984 ஆம் ஆண்டு வெளியான தாவணி கனவுகள் திரைப்படத்தில் கூட்டத்தில் ஒருவராக நடித்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் மயில்சாமி. அதன் பின்னர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பல வருடங்களாக சினிமாவில் போராடிக் கொண்டிருந்தார். நடிகர் தனுஷ் உடன் இவர் நடித்த தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் போன்ற படங்களினால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

Also Read:தோல்வியில் முடிந்த 5 காதல் படங்கள்.. பரத்தை பைத்தியமாக அலையவிட்ட சந்தியா

Trending News