புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சமீபத்தில் இறந்த 5 நடிகர்கள் கடைசியாக நடித்த படங்கள்.. மகனுக்காக களம் இறங்கிய கேப்டன்

Captain Vijayakanth: கடந்த இரண்டு வருடங்கள் தமிழ் சினிமாவுக்கு ஒரு மிகப்பெரிய பேரிழப்பாக இருந்து வருகிறது. சினிமாவில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த பிரபலங்கள் தங்களுடைய இன்னுயிரை இழந்து இருக்கிறார்கள். சினிமா கலைஞர்களை தாண்டி இவர்கள் நல்ல மனிதர்கள் என்பதால் தான் இன்று வரை இவர்களுடைய மரணத்தை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்படி சமீபத்தில் உயிரிழந்த ஐந்து நடிகர்கள் கடைசியாக நடித்த படங்களை பற்றி பார்க்கலாம்.

கடைசியாக நடித்த படங்கள்

விஜயகாந்த்: நடிகர்கள் விஜய், சூர்யா, முரளி போன்றவர்களுக்கு தன்னுடைய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல அடையாளத்தை வாங்கிக் கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த். அவருடைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவுக்கு வந்தபோது கடந்த 2015 ஆம் ஆண்டு தன்னுடைய மகன் படமான சகாப்தம் படத்தில் இறுதியாக விஜயகாந்த் நடித்திருந்தார். எத்தனையோ சினிமா கலைஞர்களை உருவாக்கிய இவர் தன்னுடைய மகனின் வெற்றியை பார்க்காமலேயே மறைந்து விட்டார்.

விவேக்: தன்னுடைய நகைச்சுவை காட்சிகளின் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் விவேக் மக்களால் சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்டார். இறப்பதற்கு முன்தினம் வரைக்கும் கொரோனா தடுப்பூசி பற்றி விழிப்புணர்வை கொடுத்துக் கொண்டிருந்தார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். விவேக் கடைசியாக நடிகர் விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Also Read:6 அடி நடிகரை பார்த்து பிரமித்த கமல்.. சொன்னதுக்காக ரெண்டு கதாபாத்திரத்தை கொடுத்த உலகநாயகன்

மயில்சாமி: ஒரு பிரபலமான காமெடி நடிகர் என்பதை தாண்டி மனித நேயம் மிக்க மனிதர் என்ற பெயரை வாங்கியவர் தான் மறைந்த நடிகர் மயில்சாமி. அவர் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். இவருடைய இறப்பிற்கு பிறகு தான் இவர் எவ்வளவு தான தர்மங்கள் செய்திருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகின. மயில்சாமி இழப்பதற்கு முன்பு கடைசி ஆக சபாநாயகன் என்னும் படத்தில் நடித்திருக்கிறார்.

மனோபாலா: இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முக திறமை கொண்டவர்தான் மனோபாலா. இளம் நடிகர்களுடன் நடித்த இவர் தன்னை எப்போதுமே இளமையாக வைத்துக் கொண்டார். இறப்பதற்கு முன்பு வரை தன்னால் முடியவில்லை என்பதை எந்த ஒரு இடத்திலுமே அவர் காட்டிக் கொள்ளவில்லை. மனோபாலா கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் கல்லீரல் நோயால் உயிரிழந்தார். இவர் கடைசியாக நடித்த படம் சந்தானத்தின் 80ஸ் பில்டப்.

போண்டாமணி: வைகைப் புயல் வடிவேலுவின் நகைச்சுவை குழுவில் முக்கிய நடிகராக இருந்தவர் தான் போண்டாமணி. இவருடைய காமெடி காட்சியில் ‘அடிச்சு கேப்பாங்க சொல்லிடாதீங்க’ என்று வரும் வசனம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. போண்டாமணி சிறுநீரக செயலிழப்பால் பல வருடங்களாக உயிருக்கு போராடி தான் வந்தார். கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்த போண்டாமணி கடைசியாக நடித்த படம் ஸ்ரீ சபரி ஐயப்பன்.

Also Read:கமல் போல் வாக்குறுதி கொடுக்கும் விஜய்.. ரெண்டு வருஷத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கப் போகும் தளபதி

Trending News