ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

2024-ல் பெர்சனல் விஷயத்தை வெளியில் கொண்டு வந்து பல்பு வாங்கிய 5 செலிபிரிட்டிகள்.. காமெடி பீஸான நயன்தாரா!

Nayanthara: நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னுன்னு சொல்லுவாங்க. அப்படித்தான் இந்த வருஷம் 5 செலிப்ரட்டிகளின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. தங்கள் சொந்த வாழ்க்கையில் நடந்ததை மக்களிடம் சொல்ல வேண்டும் என எதிர்பார்த்து அதுவே அவர்களுக்கு பல்பாய் மாறி இருக்கிறது. அந்த சம்பவங்களை பற்றி பார்க்கலாம்.

பல்பு வாங்கிய 5 செலிபிரிட்டிகள்

நயன்தாரா: தனுஷ் உங்களுக்கு எங்களோட வளர்ச்சி புடிக்கல, தயவு செஞ்சு எங்களை வாழ விடுங்க என்று மூன்று பக்கத்திற்கு அறிக்கை விட்டார் நயன்தாரா. கடைசியில் அவர் படைப்புக்கு ஒரு தயாரிப்பாளரா காசு கேட்கிறார் கொடுத்துடுமா என ரசிகர்கள் ரிவிட் அடித்து விட்டார்கள்.

ஜோதிகா: சூர்யா மீது திட்டமிட்டு வன்மம் பரப்பப்படுகிறது. கங்குவா படத்தை திட்டமிட்டு தோல்வியடைய வைக்க பார்க்கிறார்கள் என அறிக்கை விட்டிருந்தால் ஜோதிகா.படம் நல்லா இருந்தா நல்லா இருக்குன்னு சொல்ல மாட்டோமா, சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்களை எல்லாம் நாங்கள் பாராட்டலையா என திருப்பி கேள்வி கேட்டிருக்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

ஏ.ஆர். ரகுமான்: தன்னுடைய இசையால் ரசிகர்களின் காதலை வளர்த்து விட்ட பெரிய பாய் தன் மனைவியை பிரிவதாய் அறிவித்த போது எல்லோருக்குமே பெரிய வருத்தத்தை கொடுத்தது. ஆனால் அத்தோடு சேர்த்து #arrsairaabreakup என்ற ஹாஷ்டாக்கை போட்டது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அது மட்டும் இல்லாமல் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என் கணவரை பெறுகிறேன் என சாய்ராம் கொடுத்த அறிவிப்பு பெரிய அளவில் பேசும் பொருளானது.

எஸ் ஆர் பிரபு: கங்குவா படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் எஸ் ஆர் பிரபு. இவர் யூடியூப் விமர்சனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற அறிக்கையில் முதல் ஆளாக கையெழுத்திட்டவர் என கூறப்படுகிறது.

தேவி ஸ்ரீ பிரசாத்: இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தான் என்னவோ நினைத்து பேசியது சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் எதிர்ப்பை சந்தித்திருக்கிறது. அதாவது தான் இசையமைத்துக் கொடுக்க ரொம்ப லேட் செய்வதாக தயாரிப்பு நிறுவனம் குறை சொல்வதாக சொல்லி இருக்கிறார். இது குட் பேட் அக்லி படத்திற்கும் சொல்கிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்பியது.

அதே மாதிரி புஷ்பா பட தமிழ் விழாவில் அவர் முழுக்க தெலுங்கில் பேசியதும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.சமீபத்தில் நடந்த சொர்க்கவாசல் படத்தின் விழாவில் ஆர் ஜே பாலாஜி இவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருப்பார். அதாவது பிஸ்கட்டை கடையில் விற்க கொடுத்த பிறகு நல்லா இல்லைன்னு சொல்ல தான் செய்வாங்க. கண்டெண்டு நல்லா இருந்தால் அந்தப் படம் கண்டிப்பாக மக்களிடம் போய் சேரும் என சொல்லி இருக்கிறார்.

Trending News