பல கோடிகளில் விநியோகம் செய்யப்படும் படங்களின் வசூலை பொறுத்தே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். மேலும் ஒரு சில பட வெற்றிக்கு பிறகு அதைத்தொடர்ந்து அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்படும் படங்கள் வெற்றி பெறவில்லை என்றால் பேரிழப்பை சந்திக்க நேரிடுகிறது.
இது போன்ற காரணங்களால் தமிழ் சினிமாவில் பிரமாண்டமாக தன் அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட நிறுவனங்கள் காணாமல் போனதும் உண்டு. அவ்வாறு அகல கால் வைத்ததால் அடியோடு அழிந்த 5 தயாரிப்பு நிறுவனங்களை பற்றி இங்கு காணலாம்.
Also Read: ஏஆர் ரகுமானை யூஸ் பண்ணிய இளையராஜா.. காலம் கடந்தும் தெரியாமல், கிடைக்காத அங்கீகாரம்
ரோஜா கம்பைன்ஸ்: 1996ல் காஜா மொய்தீன் என்பவரால் உருவாக்கப்பட்ட இத்தகைய நிறுவனத்தின் கீழ் வெளியான படங்கள் ஏராளம். போர்க்களம், பூந்தோட்டம், பெண்ணின் மனதை தொட்டு போன்ற படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. அதன்பின் 2004ல் அஜித்தின் நடிப்பில் வெளிவந்த ஜனா என்னும் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியான இழப்பை சந்தித்தது. அதன் பின் உருவாக்கப்பட்ட படங்களும் கை கொடுக்காத நிலையில் இத்தகைய நிறுவனம் காணாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
வொண்டர் பார் பிலிம்ஸ்: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அவர்களால் நிறுவப்பட்ட இத்தகைய நிறுவனத்தின் கீழ் வெளிவந்த படங்கள் ஆன 3, எதிர்நீச்சல், வேலை இல்லாத பட்டதாரி, நானும் ரவுடிதான் போன்ற படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றது. அதன்பின் ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா படமும் நல்ல விமர்சனங்களை பெற்று தந்தாலும், பட்ஜெட் ரீதியாக ஓரளவு வசூலையே பெற்று தந்தது. அதன்பின் அதிக பட்ஜெட்டில் இவர் மேற்கொண்ட படங்கள் எதுவும் போதிய வரவேற்பு பெறாமல் இருந்து வருகின்றன.
Also Read: படம் எடுக்குறது ஈசி அதை ரிலீஸ் பண்றது கஷ்டம்.. ரஜினி படத்திற்கே இப்படி ஒரு சோதனையா
சிவாஜி புரொடக்ஷன்:1956ல் சிவாஜி குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட இத்தகைய நிறுவனத்தின் கீழ் வெளிவந்த புதிய பார்வை, வியட்நாம் வீடு, மன்னன், சந்திரமுகி போன்ற பல படங்கள் நல்ல வசூலை பெற்று தந்தது. அதன்பின் அஜித்தின் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படமான அசல் பெரும் இழப்பை பெற்று தந்தது. அதற்கு பின்பு இவர்கள் எந்த படமும் முயற்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கவிதாலயா: 1981ல் கே பாலச்சந்தர் நிறுவப்பட்ட இத்தகைய நிறுவனத்தின் கீழ் சுமார் 50க்கும் மேற்பட்ட படங்கள் மூன்று மொழிகளிலும் வெளிவந்திருக்கின்றன. 2008ல் ரஜினியின் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் வெளிவந்த படமான குசேலன் படத்தின் இழப்பால் அதன்பின் மேற்கொண்ட படங்களும் கைகொடுக்காமல் தற்பொழுது யூடியூபில் பழைய சீரியல்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஏவிஎம்: 1945ல் ஏ வி மெய்யப்பன் உருவாக்கப்பட்ட இத்தகைய தயாரிப்பின் கீழ் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்கள் பல மொழிகளில் வெளிவந்திருக்கின்றன. மேலும் பல டாப் ஹீரோக்களை வைத்து படம் தயாரித்து வெற்றி கண்டது. 2007ல் ரஜினி நடிப்பில் வெளிவந்த சிவாஜி படம் சுமார் 95 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. அதன் வெற்றிக்கு பிறகு வேட்டைக்காரன் படமும் கமர்சியல் ஹிட் கொடுத்தது. அதைத்தொடர்ந்து இவர்கள் மேற்கொண்டு அதிக பட்ஜெட் படங்கள் கை கொடுக்காததால் தற்பொழுது இந்த நிறுவனத்தின் கீழ் எந்த படங்களும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.