புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஷாலினிக்காக அஜித் மாற்றிய 5 குணங்கள்.. சால்ட் & பெப்பர் ஸ்டைலுக்கு பின்னால் இருக்கும் சீக்ரெட்

எத்தனையோ நடிகர், நடிகைகள் சில படங்களில் நடிக்கும்போது அவர்களுக்குள் காதல் காட்டுத் தீ போல் பத்திக்கும். இருந்தாலும் சிலர் மட்டுமே திருமணம் செய்துக்கொண்டு சந்தோசமாக வாழ்வார்கள். இன்னும் சிலரோ காதலித்து கல்யாணம் பண்ணியும், விவாகரத்து செய்துக்கொண்டு வாழ்ந்து வருவார்கள். ஆனால் இவர்களுக்கெல்லாம் விதிவிலக்காக இருக்கும் ஜோடி தான் அஜித், ஷாலினி தம்பதியினர்.

அமர்க்களம் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த நிலையில், அஜித்தும், ஷாலினியும் காதலித்து 2000 ஆம் ஆண்டு ஏப்ரலில் திருமணம் செய்துக்கொண்டார்கள். அதன் பின்னர் அஜித்தின் சினிமா கேரியர் சற்று ஏறுமுகத்தில் இருந்தது. அதே சமயத்தில் ஷாலினியும் படங்களில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமான 23 வருடங்களில்  இரு பிள்ளைகளும் உள்ளனர்.

Also Read: வித்தியாசமாக ஷாலினியிடம் காதலை வெளிப்படுத்திய அஜித்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ரொமான்ஸ்

இப்படி குழந்தை, குடும்பம் என அஜித், ஷாலினி தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வரும் ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது. திருமணம் என்பது கணவன் மனைவிக்காகவும், மனைவி கணவனுக்காகவும் அவர்களுக்கென இருக்கும் சில பழக்க வழக்கங்களை விட்டுக்கொடுத்து வாழ்ந்தாள் தான் அந்த வாழ்க்கை இனிமையாக இருக்கும். அந்த வகையில் தனது மனைவி ஷாலினியால், அஜித் மாற்றிக்கொண்ட 5 குணங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

முதலில், அஜித்துக்கு திருமணத்துக்கு முன்பாகவே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகம் இருந்துள்ளது. இந்த பழக்கம் திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்த நிலையில், புகை நமக்கு பகை என ஷாலினி கூறிய அறிவுரையால் அப்பழக்கத்தில் இருந்து அஜித் முற்றிலுமாக விடுப்பட்டார். அடுத்ததாக எப்பயுமே சிறிய, சிறிய விஷயத்துக்கு கூட அஜித் முன்கோபம் கொள்வாராம், அதையும் ஷாலினி பேச்சை கேட்டு அடியோடு நிறுத்தியுள்ளார்.

Also Read: அஜித் செய்த உதவி.. நன்றி கடனாக பெண்ணின் கணவர் செய்த காரியம்

மேலும் ஒரு படத்தில் நடித்துவிட்டு அந்த படம் ஓடுமோ, ஓடாதோ என டென்ஷனாக யோசித்துக்கொண்டே இருப்பாராம். இதனால் ஷாலினி, ஒரு படம் அஜித் நடித்து முடித்தவுடன் கையோடு அவரை சுற்றுலாவுக்கு அழைத்து சென்று ரிலாக்ஸ் செய்வாராம். அதே போல செல்லப்பிராணிகள் வளர்க்க ஷாலினிக்கு பிடிக்கும் என்பதால் அஜித்தும் அதன் மீது ஆசைப்படுவாராம்.

கடைசியாக அஜித்தின் அடையாளமாக இருக்கும் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலை ஷாலினியால் தான் அஜித் வைத்துள்ளாராம். ஷாலினிக்கு தலையில் டை உள்ளிட்டவை அடிப்பது பிடிக்காதாம். மேலும் அஜித்தின் சால்ட் அண்ட் பேப்பர் லுக் நன்றாக இருப்பதால், அவரை இப்படியே மெயின்டைன் செய்ய வலியுறுத்தியுள்ளார். இப்படி அஜித் தனது மனைவி ஷாலினிக்காக விட்டுக்கொடுத்த அனைத்துமே அவரை நல்ல நடிகராக பார்ப்பதை காட்டிலும், நல்ல கணவனாகவும் அவர் வாழ்க்கையில் வெற்றிப்பெற்று வருகிறார் என்பது தெரிகிறது.

Also Read: அஜித்திடம் இப்ப வரை இருக்கும் ஒரே கெட்ட பழக்கம்.. எவ்வளவு முயற்சித்தும் ஷாலினியால் மாற்ற முடியல

Trending News