செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விவேக்கை பாடாய்படுத்தி லூட்டி அடித்த மயில்சாமியின் 5 படங்கள்.. வள்ளல் என புகழ்ந்து பேசிய விவேக்

Five quality comedy films with Vivek and Mayilsamy: தமிழ் சினிமாவில் சீர்திருத்த கருத்துகளை முன்னெடுத்து வைத்து தனது காமெடியின் மூலம் மக்களை மகிழ்வித்தவர் விவேக். இவரை ரியல் லைஃப்லும் ரீல் லைஃப்லும் பாடாய்படுத்தியவர் தான் மயில்சாமி. மயில்சாமியை பற்றி  ஒரு முறை பேசும்போது “இவன் ஒரு நேரம் பார்த்த பணக்காரனாய் இருப்பான் ஒரு நேரம் பிச்சைக்காரனா இருப்பான்”, பாரதியார் போல தன்னிடம் உள்ள காசை மற்றவர்களுக்கு கஷ்டப்படுகிறவர்களுக்கு கொடுத்துவிட்டு ஆட்டோக்கு பைசா தா மச்சான்னு கேட்பான் என்று குறிப்பிட்டிருந்தார் விவேக்,

விவேக் மற்றும் மயில்சாமியின் கூட்டணியில் அமைந்த 5  தரமான படங்கள் இதோ,

பெண்ணின் மனதை தொட்டு: பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த பெண்ணின் மனதை தொட்டு திரைப்படத்தில் “தமிழை தமிழனுக்கு சென்னை பாஷையில் மொழியாக்கம் செய்து, தமிழனை கலங்கடித்து இருந்தார்” மயில்சாமி. “பாடி மண்ணுக்கு உசுரு பேச்சுக்கு” என்று  இளம் அரசியல்வாதி விவேக்குடன் அலப்பறையை கிளப்பினார் மயில்சாமி.

சீனு: டெத் மியூசிக் என்று சாவு குத்துக்கு புது பெயரிட்டு  லூட்டி அடித்தனர் விவேக்கும் மயில்சாமியும். சாவு குத்து பற்றி விவேக் விசாரிக்க “அப்பிட்டான பாடி!,அப்பாலே வர,நாங்க முன்னாடி அடிச்சு ஆடிட்டே போவோம்” என்று தன் உடல் மொழியாலும் வசனங்களாலும் தெறிக்க விட்டிருந்தார் மயில்சாமி.

Also read: சாப்பாட்டில் ஸ்டிக்கர் ஒட்டி கமலை அவமானப்படுத்திய விசுவாசிகள்.. இப்பவும் மயில்சாமியை தேட இதுதான் காரணம்

உள்ளம் கொள்ளை போகுதே: பிரபுதேவாவுடன் மயில்சாமி தாமு உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் காமெடியில் வயிறு வலிக்க வைத்தனர். மயில்சாமி மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆகவும் விவேக் “தண்ணில கண்டம்! தண்ணில கண்டம்” என மூடநம்பிக்கைக்கு எதிராக  காமெடியில் களம் இறங்கும் சீர்திருத்தவாதியாகவும் நடித்திருந்து அசத்தியிருந்தனர்.

பாளையத்து அம்மன்: போலி சாமியாரை தோல் உரிக்கும் கதாபாத்திரத்தில் விவேக்கும் மயில்சாமியும் அபாரமாக நடித்திருந்தனர் விவேக் மயில்சாமியை பார்த்து “மைக் திருடுன பைய இந்த பைய” என்று கூறும் போது சிரித்துக் கொண்டே “மைக்கு திருடன் மட்டும் சொல்லாதீங்க” என நக்கல் அடித்து நடனமாடி ரசிகர்களை ரணகளப்படுத்தி  இருந்தனர்.

தூள்: விக்ரம் மற்றும் ஜோதிகா நடித்த தூள் திரைப்படத்தில் விவேக்கின் அசிஸ்டன்டாக வரும் மயில்சாமி, விவேக்கின் காதலி ரீமாசெனுக்காக பிரார்த்தனை செய்யப் போவதாக கூறி விவேக்கிடம் நல்ல பணத்தை கறந்திருப்பார். இதை அறிந்த விவேக் “டேய் நீ காமெடி டைம் இல்லடா என்னோட பேட் டைம், நீ பண்ணது எல்லாத்தையும் ஒத்துப்பேன் ஆனால்  திருப்பதியில் லட்டுக்கு பதிலா ஜாங்கிரி கொடுக்கறாங்கன்னு சொன்னா பாத்தியா அத மட்டும் என்னால தாங்கிக்கவே முடியல” என்று பிரித்து மேயும் காமெடி ரசிகர்களை வயிறு வலிக்க செய்தது.

Also read: கெட்ட எண்ணத்தோடு தூபம் போட்ட வடிவேலு.. ஒரே வார்த்தையால் வாயை மூட செய்த விவேக்

Trending News