தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் மாஸ் ஹிட்டுக்கு பிறகு வெளியாக உள்ள படம் நானே வருவேன். இந்நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளதால் பலரும் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர். ஆனால் நானே வருவேன் படம் இப்படத்தின் ரிலீஸுக்கு முதல் நாள் வெளியாக உள்ளது. மேலும் நானே வருவேன் படத்தை கண்டிப்பாக பார்க்க 5 காரணங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
செல்வராகவன், தனுஷ், யுவன் சங்கர் ராஜா : இவர்களது கூட்டணியில் வெளியான படங்கள் எல்லாமே மெகா ஹிட் படங்கள் தான். காதல் கொண்டேன், புதுப்பேட்டை படங்களை தொடர்ந்து நானே வருவேன் படத்தில் இவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர். இதனால் நானே வருவேன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Also Read :தனுஷை வைத்து விளையாடும் தாணு.. பொன்னியின் செல்வன் அளவுக்கு செய்யணும்னு அவசியம் இல்ல
செல்வராகவன் : செல்வராகவன் தனது தம்பி தனுஷுக்கு நிறைய ஹிட் படங்களை கொடுத்துள்ளார். பீஸ்ட் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமான செல்வராகவன் சாணிகாகிதம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். நானே வருவேன் படத்தின் மூலம் முதல்முறையாக செல்வராகவன் தனது சொந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தனுஷ் : தனுஷ் கொடி படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நானே வருவன் படத்திலும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஆனால் இந்த படத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Read :மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்.. தெரியாமல் தலையை விட்டோமோ என புலம்பும் தனுஷ்
இந்துஜா, எல்லி அவ்ராம் : நானே வருவேன் படத்தில் இரண்டு முன்னணி கதாநாயகிகள் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் நடிகை எல்லி அவ்ராம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். மேலும் இந்துஜா, எல்லி அவ்ராம் இருவருக்குமே இப்படத்தில் தைரியமான மற்றும் வலுவான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
ரன்னிங் டைம் : சமீபகாலமாக வெளியாகும் படத்தில் நீளம் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். ஆனால் நானே வருவேன் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 2 நிமிடங்கள் தானாம். தனுஷின் திரைப்படங்களில் மிகக் குறுகிய நேரத்தை கொண்ட படம் நானே வருவேன் தான்.
Also Read :கேப்டன் மில்லருக்கு பின் சிம்பு பட இயக்குனருடன் கூட்டணி போடும் தனுஷ்.. மாஸ் அப்டேட்