திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சமீபத்தில் வெளியாகி அட்டர் பிளாப் ஆன 5 படங்கள்.. ரீ-என்ட்ரியில் லிங்குசாமிக்கு ஊதிய சங்கு!

சமீப காலமாக தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் சில திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறாமல் படுதோல்வி அடைந்து விடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி அட்டர் பிளாப் ஆன ஐந்து திரைப்படங்களைப் பற்றி இங்கு காண்போம்.

காத்து வாக்குல ரெண்டு காதல் – விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் இணைந்து நடித்திருந்த இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இந்த திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு பெரும் ஆரவாரத்தோடு வெளியானது. ஆனால் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூலில் லாபம் கிடைக்கவில்லை. அந்த வகையில் இந்த படம் ஒரு பிளாப் படமாக மாறியுள்ளது.

தி வாரியார் –  பிரபல தமிழ் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கில் வெளியான இப்படத்தில் ராம் போத்தினேனி, ஆதி, கீர்த்தி செட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த மாதம் வெளியான இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

அந்த வகையில் லிங்குசாமி பல வருடங்களுக்கு பிறகு இயக்கிய இந்த படத்தை தான் பெரிதும் நம்பி இருந்தார். ஆனால் அவருடைய எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் இந்த படம் தோல்வி அடைந்தது. 70 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படத்தின் வசூல் 36 கோடியை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குலு குலு – சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குலு குலு. இவரின் முந்தைய திரைப்படங்கள் சில தோல்விகளை சந்தித்த நிலையில் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. நல்ல விமர்சனங்கள் கிடைத்தும் இந்த திரைப்படம் பெரிய அளவில் வசூலை ஈட்டவில்லை. இதனால் சந்தானத்திற்கு இந்த படமும் தோல்வி படமாக அமைந்துள்ளது.

இரவின் நிழல் – பார்த்திபன் இயக்கி நடித்திருந்த இந்த திரைப்படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டு சாதனை படைத்தது. மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு வெளியான இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.

மேலும் திரைப்படத்தின் சில காட்சிகள் குறித்தும் சர்ச்சைகள் எழுந்தது. இதனால் படம் வசூலில் சக்கை போடு போடும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என்பது தான் உண்மை.

தி லெஜண்ட் – சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தயாரித்து, ஹீரோவாக நடித்திருந்த இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் படம் வெளியான முதல் நாளிலேயே இந்த படத்திற்கு அவ்வளவாக கூட்டம் வரவில்லை. இருப்பினும் ஓரளவுக்கு வசூலை பெற்ற இந்த திரைப்படம் தோல்வி பட லிஸ்டில் சேர்ந்துள்ளது.

Trending News