வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

முத்தின பின் ஜொலித்த 5 முரட்டு ஹீரோக்கள்.. பல போராட்டங்களுக்குப் பிறகு வெற்றி கண்ட விஜய் சேதுபதி 

ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் இளம் வயதில் இருந்தே சினிமா துறையில் தடம் பதித்து நடித்து வருகின்றனர். அதிலும் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கும் கூட டஃப் கொடுக்கும் விதத்தில், ஹீரோ கதாபாத்திரத்தில் தங்களது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் ஒரு சில நடிகர்கள் தங்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சினிமா துறையில் வெற்றி கண்டுள்ளனர். அப்படியாக வயது முத்தின பின் ஜொலித்த 6 முரட்டு ஹீரோக்களை இங்கு காணலாம்.

ராஜ்கிரண்: 1989 ஆம் ஆண்டு வெளியான என்ன பெத்த ராசா என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதிலும் இவர் தனது 35 வயதிற்குப் பிறகே தனது திரை பயணத்தை தொடங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து தற்பொழுது குணச்சித்திர கதாபாத்திரங்களில் மாஸ்காட்டி வருகிறார்.

Also Read: ஹீரோவை விட ராஜ்கிரண் பெயர் வாங்கிய 5 படங்கள்.. முத்தையாவாக பந்தாடிய கொம்பன்

பசுபதி: 2011 ஆம் ஆண்டு வெளியான அரவான் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதிலும் தனது 42 வயதிற்குப் பிறகே இவர் சினிமா துறையில் ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து வெடிகுண்டு முருகேசன், குசேலன் போன்ற படங்களில் சாதுவான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் 2003 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான தூள் படத்தில் ஆதி என்னும் கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன் பின்னர் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ரங்கன் வாத்தியாராகவே வாழ்ந்திருப்பார்.

விஜய் சேதுபதி: 2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தனது 32 வயதிற்கு பிறகே இவர் சினிமா துறையில் ஹீரோவாக அறிமுகமானார். அதிலும் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். மேலும் நடிகரையும் தாண்டி, தற்பொழுது வில்லன் கதாபாத்திரங்களில் பட்டையை கிளப்பி வருகிறார். இவ்வாறு சினிமா துறையில் தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார் விஜய் சேதுபதி.

Also Read: வியாபாரம் ஆகாத விஜய் சேதுபதி.. தயாரிப்பாளர்கள் தெரித்து ஓடும் கொடுமை.!

எஸ் ஜே சூர்யா: இயக்குனராக அறிமுகமானவர் தான் எஸ் ஜே சூர்யா. தொடர்ந்து ஒரு சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதிலும் இவர் தனது 36 வயதிற்குப் பிறகே தனது திரை பயணத்தில் வெற்றி கண்டார். மேலும்  நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி போன்ற திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து நண்பன், ஸ்பைடர், மெர்சல் போன்ற படங்களில் வில்லனாகவும் மிரட்டி இருப்பார்.

விஜய் ஆண்டனி: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் விஜய் ஆண்டனி. பின்னர் நடிப்பதில் ஆர்வம் காட்டிய இவர் தனது 37 வது வயதில் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதிலும் திமிரு புடிச்சவன் திரைப்படத்தில் மாஸ் காட்டி இருப்பார்.

Also Read: இந்த 6 இயக்குனர்கள் படம்னாலே ‘ஏ’ சர்டிபிகேட் கன்ஃபார்ம்.. கதையை விட அந்த மாதிரி காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது

Trending News