புதன்கிழமை, ஜனவரி 15, 2025

முரட்டு காதலை சினிமாவிற்கு கற்றுக் கொடுத்த டி ராஜேந்தர்.. உருகி உருகி செதுக்கிய 5 படங்கள் 

தமிழ் சினிமாவை பொறுத்தவரையிலும் எத்தனையோ காதல் படங்கள் வெளியாகி கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் காதல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று டி ராஜேந்தர் தனது படங்களின் மூலம் காண்பித்துள்ளார். அப்படியாக உருகி உருகி செதுக்கிய முரட்டு காதலை சினிமாவிற்கு கற்றுக் கொடுத்த 5 காதல் படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

ரயில் பயணங்களில்: டி ராஜேந்தர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரயில் பயணங்களில். இதில் ஸ்ரீநாத், ஜோதி, ராஜீவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்றது. அதிலும் இப்படத்தில் உண்மையாக காதலிக்கும் இருவர் தங்கள் காதலை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தாமலேயே கடைசி வரையில் இருந்து விடுகின்றனர். இதனால் பல பிரச்சினைகளை சந்திக்கும் இவர்கள் தான் அழிந்தாலும் தான் காதலித்தவள் அழியக்கூடாது என்பதனை மையமாக வைத்து படமானது அமைந்துள்ளது. மிக அழகாக செதுக்கி இருக்கும் இப்படமானது டி ராஜேந்திரனின் மணி மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல் போன்று  அனைவரது நெஞ்சங்களையும் கவர்ந்திருந்தது.

Also Read: சிம்புவுக்கு இனி வேற சாய்ஸ் இல்ல.. ஹேப்பி மூடில் நாள் குறித்த டி.ராஜேந்தர்

நெஞ்சில் ஒரு ராகம்: 1982 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நெஞ்சில் ஒரு ராகம். இதில் ராஜீவ், தியாகராஜன், சரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் உண்மையாக காதலிக்கும் ஒரு பெண் ஒரு கட்டத்தில் காதலனால் எவ்வாறு கைவிடப்படுகிறாள் என்பதை மையமாக வைத்து இப்படமானது அமைந்துள்ளது. அதிலும் ஒரு பெண்ணின் ஆழமான காதலை அழகாக விவரிக்கும் கதையாக இப்படம் ரசிகர்களின் நெஞ்சங்களை ரணமாக்கி இருக்கும்.

ஒரு தலை ராகம்: இயக்குனர் ஈ எம் இப்ராஹிம் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஒரு தலை ராகம். இதில் சங்கர், ரூபா, சந்திரசேகர், தியாகு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தின் கதையானது ரயில் பயணத்தின் பொழுது முதல் சந்திப்பிலேயே தங்களது மனங்களை பறிகொடுத்த காதலர்கள் கடைசிவரையிலும் அதனை ஒருவர் மற்றவரிடம்  தெரிவிக்காமலேயே விட்டு விடுகின்றனர். இதன் மூலம் பல்வேறு  எதிர்பார்ப்புகளுடன் இருந்து வரும் நாயகன் கடைசியில் காதலுக்காக தனது உயிரை மாய்த்துக் கொள்கிறார். மேலும் இப்படம் ஆனது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read: டி ராஜேந்தரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய எம்ஜிஆர்.. கூடுவிட்டு கூடு பாய்ந்த ரகசியம்

உயிருள்ளவரை உஷா: உஷா ராஜேந்தர் தயாரிப்பில் 1983 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் உயிருள்ளவரை உஷா. இதில் டி ராஜேந்தர் உடன் நளினி, எஸ் எஸ் சந்திரன், கங்கா, கவுண்டமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் கல்லூரி பருவத்தில் மலரும் காதலை மிக அழகாக காட்டும் விதத்தில் இப்படமானது அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் உண்மை காதலை உரக்க சொல்லும் அளவிற்கு அனைவரது நெஞ்சங்களையும் கவர்ந்திருந்தது.

மைதிலி என்னை காதலி: டி ராஜேந்தர் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மைதிலி என்னை காதலி. இதில் டி ராஜேந்தர், ஸ்ரீவித்யா, அமலா, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் கதையானது தனது பெயரை பயன்படுத்தி பாடல்கள் பாடுவதன் மூலம் டி ராஜேந்தர் என்னை தான் காதலிக்கிறாரோ என்று தவறாக புரிந்து கொள்கிறார். பின்னர் உண்மை நிலையை அறிந்து அவர் மேல் காதல் கொள்கிறார். அதிலும் ஒரு பெண்ணால் மிக ஆழமாக காதலிக்க முடியுமா என்பதனை மையமாக வைத்து இப்படமானது அமைந்துள்ளது. அதிலும் டி ராஜேந்தர் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் உருக வைத்திருப்பார் என்றே சொல்லலாம்.

Also Read: விஜய்யை வயிறு குலுங்க சிரிக்க வைத்த அந்த 4 பேரின் சேட்டைகள்.. புலி பட ப்ரோமோஷனில் டி ஆர் செய்த அலப்பறை

Trending News