வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய 5 காதல் படங்கள்.. தளபதி விஜய்க்கு அடையாளம் கொடுத்த விக்ரமன்

சினிமாவை பொறுத்தவரை ஆக்சன் படங்கள், மாஸ் படங்கள், த்ரில்லர் படங்கள், திகில் படங்கள் என எத்தனை வந்தாலும் காதல் படங்களுக்கென்று எப்போதுமே ஒரு தனி வரவேற்பு உண்டு. சில படங்களின் காதல் காட்சிகள் நம் வாழ்வியலோடு ஒன்றி விடுவதால் நம் மனதில் நீங்காமல் நின்று விடும்.

1.96: தமிழ் சினிமாவில் இதுவரை பேசப்படாத காதல் கதை 96. படம் பார்த்தவர்கள் அத்தனை பேருக்கும் அவர்களுடைய பள்ளிப்பருவ காதலை ஒரு கணம் நியாபகப்படுத்தியது இந்த படம். ராம்-ஜானுவின் பள்ளிப்பருவ காதல், நீண்ட நாட்களுக்கு பின் சந்திக்கும் போது காதலின் மீதான இருவரின் ஏக்கம் பார்ப்பவர்களை கலங்க வைத்தது. இசையமைப்பாளர் கோவிந்த் இசையில் ‘காதலே காதலே’ பாடல் எப்போது கேட்டாலும் மனதை வருடும்.

Also Read: விஜய்சேதுபதிக்கு அல்வா கொடுத்த லலித்.. எச் வினோத்தை பார்சல் செய்து அனுப்பியதன் பின்னணி

2. காதல்: உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது தான் காதல் திரைப்படம். வசதியான பெண், பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஆணை காதலிக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளை தெளிவாக எடுத்து சொன்னது தான் முருகன்-ஐஸ்வர்யாவின் காதல். இந்த படம் பரத்துக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

3.மௌன ராகம்: இயக்குனர் மணிரத்தினத்தின் அழகான காதல் கதைகளில் ஒன்று மௌன ராகம். திவ்யா-மனோகர்-சந்திரகுமார் இந்த மூவருக்குள்ளான உறவை அழகாக எடுத்துக் கூறிய திரைப்படம் இது. காதல் தோல்விக்கு பின்னும் வாழ்க்கை இருக்கிறது என்பதை உணர்த்திய திரைப்படம். கார்த்திக் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் படத்தில் ஸ்கோர் செய்திருப்பார்.

Also Read: கார்த்தி, மணிரத்னத்துடன் உதவி இயக்குனராக வேலை செய்த 3 படங்கள்.. அசால்டாக சமாளிக்கும் வந்தயத்தேவன்

4.பூவே உனக்காக: தளபதி விஜய்க்கு கோலிவுட்டில் ஒரு அடையாளத்தை கொடுத்த திரைப்படம் பூவே உனக்காக. காதலித்த பெண் இன்னொருவரை காதலிப்பது தெரிந்து அவளை வெறுக்காமல் அந்த காதலுக்கு உதவி செய்யும் ராஜாவாக விஜய் ரசிகர்களின் மனதில் நின்றிருப்பார். அழகான காதல் உணர்வை குடும்ப பின்னணியோடு கலந்து சொன்ன இந்தப்படம் விக்ரமனின் தி பெஸ்ட் என்று சொல்லலாம்.

5.உன்னை நினைத்து: சூர்யாவின் நடிப்பில் மிளிரிய திரைப்படம் உன்னை நினைத்து. தான் காதலிக்கும் பெண் தன்னை விட்டு பிரிந்தாலும், அவளுக்கு நல்லது மட்டுமே செய்யும் காதல் , தன்னை தேடி வரும் காதலை உதாசீனப்படுத்தாமல் ஏற்றுக்கொள்ளும் காதல் என முக்கோண காதல் கதையை சூர்யா-ஸ்னேகா-லைலாவை வைத்து அழகாக சொல்லியிருப்பார் விக்ரமன்.

Also Read: பிரம்மாண்ட நாவலை படமாக்கும் ஷங்கர்.. சூர்யாவை விட பாலிவுட் ஹீரோவுக்கு முன்னுரிமையா?

Trending News