வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நவரசநாயகன் இளசுகளை கவர்ந்த 5 காதல் படங்கள்.. பத்து நிமிஷத்துல பட்டையை கிளப்பிய கார்த்திக்

நவரச நாயகன் கார்த்திக் ஏராளமான பெண் ரசிகர்கள் உண்டு என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதற்கு காரணம் அவர் நிறைய காதல் படங்களில் நடித்துள்ளார். அவ்வாறு 70, 80களில் நவரச நாயகன் இளசுகளை கவர்ந்த 5 காதல் படங்களை தற்போது பார்க்கலாம்.

மௌனராகம் : மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவான ஒரு அற்புதமான காதல் படம் மௌன ராகம். இன்று வரை பலரது ஃபேவரிட் படமாக இப்படம் உள்ளது. இதில் ரேவதியின் காதலனாக கார்த்திக் 10 நிமிட காட்சிகள் மட்டுமே நடித்திருப்பார். ஆனால் படத்தின் மொத்த ஸ்கோரையும் கார்த்திக் தட்டிச் சென்றார்.

Also Read : வைராக்கியத்துடன் சாதித்துக் காட்டிய இரண்டு ஹீரோக்கள்.. செட்டே ஆகாது என்று ஒதுங்கிய கார்த்திக், பிரபு

பொன்னுமணி : கார்த்திக், சௌந்தர்யா, சிவகுமார் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பொன்னுமணி. இந்தப் படம் நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. மேலும் கார்த்திக் படத்தின் பொண்ணுமணி என்ற வெலந்தியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது.

பாண்டி நாட்டுத் தங்கம் : கஜேந்திரன் இயக்கத்தில் கார்த்திக் நிரேஷா செந்தாமரை மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பாண்டி நாட்டுத் தங்கம். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read : ஒரே கதையில் நவரசநாயகன் நடித்த 2 படம்.. விருப்பமே இல்லாமல் நடித்து விருதுகளை வாங்கிய கார்த்திக்

அக்னி நட்சத்திரம் : மணிரத்தினம் இயக்கத்தில் பிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா, விஜயகுமார் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அக்னி நட்சத்திரம். இந்த படம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் கார்த்திக் இப்படத்தின் மூலம் இளசுகளின் மனதை கவர்ந்தார்.

உள்ளத்தை அள்ளித்தா : சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக், கவுண்டமணி, ரம்பா, மணிவண்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் உள்ளத்தை அள்ளித்தா. இந்தப் படம் காமெடி கலந்த காதல் திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது. மேலும் ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read : நாங்க அதிகம் வாங்கிய சம்பளம் இவ்வளவுதான்.. வெளிப்படையாய் சொன்ன பிரபு, கார்த்திக்

Trending News