சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

சீரியலை போல நிஜ வாழ்க்கையிலும் சீரழிந்த 5 சின்னத்திரை ஜோடிகள்.. திரும்ப செய்த கர்மா

Samyuktha-Vishnukanth:எப்போதுமே தங்களுடைய சீரியல் கதைகளின் மூலம் ரசிகர்களை குழப்பி கொண்டிருந்த சீரியல் நடிகர்கள் இப்போது சொந்த வாழ்க்கையை மீடியா முன் கொண்டு வந்து சந்தி சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஆதாரங்கள் என்ற பெயரில் ஆபாசங்களை பரப்பி வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். சீரியல் காட்சிகளின் மூலம் பார்ப்பவர்களின் மனதில் நஞ்சை விதைத்து கொண்டிருந்த இவர்கள், இப்போது சொந்த பிரச்சனையின் மூலம் அதையே தான் செய்து வருகிறார்கள்.

ஈஸ்வர் – ஜெயஸ்ரீ: சில வருடங்களுக்கு முன்பு காதல் தம்பதியரான ஈஸ்வர் மற்றும் ஜெயஸ்ரீயின் குடும்ப சண்டை மீடியா முன் வந்தது. நடிகர் ஈஸ்வர் அவருடன் தொடரில் நடித்த மகாலக்ஷ்மியை காதலிப்பதாக அவருடைய மனைவி ஜெயஸ்ரீ குற்றம் சாட்டினார். ஆளுக்கு ஒரு பக்கம் ஆடியோக்களையும் ரிலீஸ் செய்தனர். இவர்கள் இருவரும் பிரிந்த நிலையில் மஹாலக்ஷ்மி தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார்.

Also Read:சம்யுக்தாவை குறித்து பகிரங்கமாக பேசி சர்ச்சையை கிளப்பிய விஜய் டிவி ராஜலஷ்மி.. இப்படியா பேசி கேவலப்படுத்துவது!

தினேஷ்- ரக்சிதா: சின்னத்திரையில் பிரபலமான ஜோடியாக இருந்தவர்கள் தினேஷ்- ரக்சிதா. பிரிவோம் சிந்திப்போம் தொடரில் நடித்த போது காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். சத்தமில்லாமல் இருந்த இவர்களது பிரிவு, தற்போது போலீஸ் ஸ்டேஷன், பேட்டிகள் என சந்தி சிரித்து கொண்டிருக்கிறது.

அர்னவ்-திவ்யா: சீரியல் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்ட ஜோடி அர்னவ்-திவ்யா. திருமணமாகி திவ்யா 3 மாதம் கருவுற்று இருந்த நிலையில், அர்னவ் வேறொரு சீரியல் நடிகையுடன் தொடர்பில் இருந்து கொண்டு தன்னை தாக்கியதாக சொல்லி, அவரை விட்டு பிரிந்திருந்தார். தற்போது பெண் குழந்தை பிறந்த நிலையில் திவ்யா, அர்னவ்க்கு எதிராக பல ஆதாரங்களை திரட்டி இப்போது பல பேட்டிகள் கொடுத்து கொண்டிருக்கிறார்.

Also Read:சீரியல் நடிகைகளை திருமணம் செய்வதே தவறு.. மீனாட்சியின் சுயரூபத்தை புட்டு புட்டு வைத்த செந்தில்

விஷ்ணுகாந்த் -சம்யுக்தா: சின்னத்திரை ஜோடிகளில் பயங்கர ட்ரெண்டாக இருந்த காதல் ஜோடி விஷ்ணுகாந்த் -சம்யுக்தா. எந்த அளவுக்கு கொண்டாடப்பட்டார்களோ அந்த அளவுக்கு இந்த ஜோடி இப்போது ரசிகர்களால் வெறுக்கப்பட்டு வருகிறது. எதையெல்லாம் மீடியா முன் சொல்ல கூடாதோ, அதையெல்லாம் சொல்லி அருவெறுப்பை சம்பாதித்து வருகிறார்கள்.

தாடி பாலாஜி- நித்யா: இந்த ஜோடிகளுக்கெல்லாம் முன்னோடியாக இருந்தவர்கள் தாடி பாலாஜி மற்றும் நித்யா. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், தங்களுடைய சொந்த வாழ்க்கையை ஆதாரங்கள் என்ற பெயரில் மீடியா முன் கொண்டு வந்தார்கள். தற்போது இவர்கள் இருவரும் நிரந்தரமாக பிரிந்து விட்டார்கள்.

சீரியல்கள் வீடுகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் ஒன்று. ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் டிஆர்பிக்காக ஆபாச காட்சிகள் வரை வைக்கிறார்கள். இதில் நெருங்கி நடிப்பவர்கள் அடுத்து காதலில் விழுந்து திருமணம் வரை சென்று இன்று அசிங்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். பணத்திற்காக இவர்கள் செய்த விஷயம் இவர்களுக்கே கர்மாவாக திரும்பி விட்டது.

Also Read:திறமை முக்கியமில்லை, டிஆர்பி தான் முக்கியம்.. விஜய் டிவி என் வாழ்க்கையே அழிச்சுட்டாங்க புலம்பும் பிரபலம்

Trending News