வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ட்ரெண்டிங்கில் இருக்கும் விஜய் டிவியின் 5 சீரியல்கள்.. புது பொண்டாட்டி போல் தகதகவென மின்னும் சீரியல்

5 serials of Vijay TV: ஒரு காலத்தில் சீரியல் என்றாலே அது சன் டிவி தான் இன்று மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார்கள். ஆனால் தற்போது சன் டிவி சீரியலை விட மற்ற சேனல்களும் வித்தியாசமான புதுப்புது பிரிவுகளை கொண்டு வருவதால் சில சேனல்களுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. அப்படி கொஞ்சம் கொஞ்சமாக சன் டிவி இடத்தை பிடித்து வருகிறது விஜய் டிவி.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக வரும் சீரியல்கள் அனைத்தும் இந்த காலகட்டத்தில் இருப்பவர்கள் பார்க்கும் படியான ட்ரெண்டிங் சீரியலாக அமைந்து வருகிறது. அதனாலயே டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்திற்குள் இரண்டு இடத்தை விஜய் டிவி பிடித்து விட்டது.

வந்ததுமே மக்களை கவர்ந்த வீட்டுக்கு வீடு வாசப்படி

இதனால் தொடர்ந்து புதுப்புது சீரியல்களை கொண்டு வந்து இறக்குகிறார்கள். அதன்படி தற்போது எந்த சீரியல்கள் அதிகமாக மக்களை கவர்ந்திருக்கிறது அதனுடைய கதை என்னவென்று பார்க்கலாம்.

சின்ன மருமகள்
வீட்டுக்கு வீடு வாசப்படி
நீ நான் காதல்
மகாநதி
சிறகடிக்கும் ஆசை

சின்ன மருமகள்: கல்யாணத்தை வெறுத்த தமிழ் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சேதுவை காதலிக்க ஆரம்பித்து விட்டார். இந்நிலையில் சேதுவிற்கு நான் தான் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்த விஷயம் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் ஒவ்வொரு நொடியும் பயப்பட்டு வருகிறார். ஆனாலும் மறு வீட்டிற்கு வந்த சேது தமிழ் குடும்பத்துடன் ஒன்றாக ஒட்டி உறவாடி நல்ல மருமகன் என்ற பெயரை எடுத்து விடுகிறார்.

இதனை தொடர்ந்து சேதுவின் அப்பத்தாவும் அங்கே வந்து விடுகிறார். பிறகு அனைவரும் ஒன்றாக இருக்கும் சூழ்நிலையில் திடீரென்று அப்பத்தா மூச்சு பேச்சு இல்லாமல் இருக்கிறார். இவருக்கு என்ன ஆச்சு என்று தெரியாமல் ஒட்டுமொத்த குடும்பமும் பயத்தில் இருக்கிறார்கள்.

மகாநதி: காவேரி மற்றும் விஜய் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு காதலையும் பாசத்தையும் காட்டி வெளிப்படுத்தாமல் டாம் அண்ட் ஜெரியாக சண்டை போட்டு வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து காவிரிக்கு ரொம்பவே நெருக்கமாக இருக்கும் கங்காவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு தற்போது தீர்ந்து விடுகிறது.

அத்துடன் அக்கா தங்கை பாசம் என்றால் இப்படித்தான் இருக்கும் போல என்று மற்றவர்களை உணர வைக்கும் அளவிற்கு கங்கா காவேரி பாசம் மனதை நெகிழ வைக்கிறது. ஆனாலும் காவிரியை பழி வாங்குவதற்கு அஜய்யை கல்யாணம் பண்ணின ராகினியால் ஏதாவது பிரச்சினை ஏற்படும் என்ற கேள்விக்குறியும் தற்போது நிலவி வருகிறது.

நீ நான் காதல்: சொல்லாமல் இருக்கும் காதலுக்கு வலு அதிகம் என்று சொல்வதற்கு ஏற்ப அபி மற்றும் ராகவ் உடைய பார்வை பார்ப்பவர்களை கவர்ந்து இழுக்கிறது. அந்த வகையில் அபிக்கு நடக்கும் கல்யாணத்திற்கு திடீரென்று ராகவ் போகிறார். போன இடத்தில் அபி உடைய கல்யாணம் தடைபடுமா? அல்லது ராகவ் உடன் கல்யாணம் நடக்குமா என்று பல திருப்பங்களுடன் கதை நகர்ந்து வருகிறது.

வீட்டுக்கு வீடு வாசப்படி: சமீபத்தில் தான் இந்த நாடகம் புதுவராக விஜய் டிவிக்கு வந்தது. ஆனால் வந்ததுமே மக்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. அதிலும் நெகட்டிவாக நடிக்கும் பல்லவியின் நடிப்பும் கேரக்டரும் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. பழிவாங்கும் எண்ணத்துடன் விஸ்வநாதன் வீட்டிற்கு நுழைந்த பல்லவியால் நடக்கும் குளறுபடிகளையும் பாசத்துடன் ஒற்றுமையாக இருக்கும் அண்ணன் தம்பிகளை பிரிக்கும் விதமாக கதை நகரப் போகிறது. ஆனாலும் பார்வதி இருக்கும் வரை அந்த குடும்பம் என்றைக்கும் உடையாது என்ற அர்த்தத்தில் இந்த நாடகம் இன்னும் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

சிறகடிக்கும் ஆசை: ரோகிணி பொய்க்கு மேல் பொய் சொல்லிக்கொண்டு விஜயா குடும்பத்தை ஏமாற்றியதோடு மட்டுமில்லாமல் மீனா மற்றும் முத்துவை ரொம்பவே மட்டம் தட்டி வருகிறார். அதனால் கூடிய விரைவில் ரோகிணி பற்றிய உண்மைகள் அனைத்தும் குடும்பத்திற்கு தெரிய வர வேண்டும்.

தெரிந்ததும் விஜயா மற்றும் மனோஜ் ரோகிணிக்கு கொடுக்க வேண்டிய தண்டனையை கொடுக்க வேண்டும் என்று ஆவலுடன் இந்த கதை பார்ப்பவர்களை சுவாரஸ்யப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரோகிணியின் மகன் க்ரிஷ் மூலம் முத்து உண்மையை கண்டுபிடிக்க தற்போது ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. அதனால் கூடிய விரைவில் ரோகினி முத்துவிடம் கையும் களவுமாக சிக்க போகிறார்.

தொடர்ந்து விஜய் டிவியில் ஆக்கிரமித்து வரும் சீரியல்கள்

Trending News